மாணவிக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி
மதுரையைச் சேர்ந்த மாணவி சுஷ்மிதாவிற்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மாசி வீதியில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்து கொண்டு மாணவிக்கான கல்விக் கடன் ரூபாய் 40 லட்சத்திற்கான சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "தமிழ்நாட்டிலே இந்தியாவிற்கான ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சியை, மதுரை மாவட்டம் கல்விக் கடன் வழங்குவதில் நிகழ்த்தி வருகிறது. அதிலே முன்மாதிரியாக 4 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாத (Collateral) இல்லதா கல்விக் கடன் வழங்கி வருகின்றோம். ஆனால் அதில் 40 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை யூனியன் பாங்க் ஆப் இந்தியா செய்து வருகிறது. கடந்தாண்டிக்கு முந்தைய ஆண்டு யோகேஸ்வர் என்ற அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஆஸ்திரேலியாவில் உள்ள "அடிலைட்" பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதற்கு 40 லட்சம் ரூபாய் வங்கி கடன் இதே வங்கியில் இருந்து பிணை இல்லாமல் வழங்கியுள்ளனர்.
பிணை இல்லாமல் கல்விக்கடன் தமிழ்நாட்டிற்கு உள் ஒரு முன்மாதிரியான நிகழ்வு
அதை பத்திரிகை செய்தியில் படித்த "சிந்து" என்ற மாணவி மாநகராட்சி வெள்ளிவீதியார் பள்ளியில் படித்து அரசு மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி படிப் படித்த மாணவி இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள "கார்டிக்" பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்று அவருக்கு கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய் பிணை இல்லாமல் கல்விக்கடன் வழங்கி உள்ளார்கள். இந்த ஆண்டும் தமிழ்நாட்டிற்கு உள் ஒரு முன்மாதிரியான நிகழ்வு நடந்துள்ளது. மாணவி சுஷ்மிதா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு என்னை வந்து சந்தித்தார். அப்போது வெளிநாட்டில் ஒரு முக்கியமான பல்கலைக்கழகத்தில் நான் படிக்க செல்கிறேன், அதற்கான கல்வி கடன் எனக்கு வேண்டும் பிணையாக கொடுப்பதற்கு என்னிடம் சொத்துகள் இல்லை எனவே எனக்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். பின்னர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா 150 பல்கலைக்கழகங்களை பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றீர்கள் என்றால் பிணை இல்லாமல் உங்களுக்கு கல்விக் கடன் வழங்க முடியும் என்று கூறினேன். இந்நிலையில் அவர் அதனை செய்து முடித்து பிணையில்லா கடன் பெற்றுள்ளார்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் யூனியன் வங்கி உயர் அதிகாரி உதய பாஸ்கர் சகாவ், மண்டல அலுவலக முதல் நிலை மேலாளர் சார்லஸ், உதவி மேலாளர் நேத்ரன், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர் ராமமூர்த்தி, அ. கோவிந்தராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய - 2ஆம்பகுதி குழு செயலாளர் பி. ஜீவா, மாணவி சுஷ்மிதா, மாணவியின் தந்தை ஆனந்தன்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை கோட்டத்தில் ரயில் போக்குவரத்து மாற்றம் ; ஏன், எதற்கு, எப்போது வரை தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chennai Encounter: சென்னையில் என்கவுன்டர் - ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொலை - நடந்தது என்ன?