மாணவர்களுக்கான போட்டி

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் தேசிய அளவில் மனக்கணிதப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு 7-வது சர்வதே எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப்  போட்டியை இன்று (சனிக்கிழமை) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது.  2500-க்கும் மேற்பட்ட மாண- மாணவியர்கள் பங்கேற்ற 7-வது  தேசிய அபாகஸ் அடிப்படையிலான  எண்கணித  மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது.

Continues below advertisement

இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து பேசிய அவர், உலக முழுவதும் சுற்றியுள்ளேன், பல நாடுகளில் பார்த்துள்ளேன். அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அந்த விஷயங்களையெல்லாம் இங்கு கொண்டு வந்து சேர்த்து விட முடியாத என எண்ணிப்பார்த்துள்ளேன். 

மாணவர்களுக்கு தனித்திறமையும் முக்கியம்

வெறும் பாடப்புத்தகத்தை மட்டுமல்ல தனித்திறமை வளர்க்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். கணக்கு பாடம் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்காமல் விளையாட்டாக இனிய நிகழ்வாக, எளிய முறையாக செய்ய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் அபாகஸ், குழந்தைகளை தனது இடுப்பில் வைத்திருப்பார்கள், அந்த குழந்தை அழுதால் எதற்காக அழுகிறது என தாய்க்கு தான் தெரியும், பசியால் அழுகிறதா.? வயிற்று வலியால் அழுகிறதா என தெரியும். அதே போல தனது குழந்தை வெற்றி பெற வேண்டும் என்பது அப்பா, அம்மா இரண்டு பேரின் ஆசை, ஆனால் ஒரு குழந்தை மட்டுமல்ல தன்னிடம் படிக்கும் அனைத்து குழந்தைகளும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஆசிரியர்கள். 

Continues below advertisement

குழந்தைகளுக்கு முதல் டீச்சர் பெற்றோர்

அதே நேரம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தொடங்குவது வீடு, குழந்தைகள் காலையில் எழுப்பும் போது அன்பாக, பாசமாக எழுப்ப வேண்டும் ஆனால் நம் வீட்டில் எருமை மாடு எழுந்திரு என திட்டியே எழுப்புவார்கள். ஆனால் வெளிநாடுகளில் குழந்தைகளோடு உரையாடுவது கூட மரியாதையாக இருக்கும். எனவே வீட்டில் இருந்து தான் இனிமையான சூழல் உருவாகிறது. குழந்தைகளுக்கு அப்பா அம்மா தான் முதல் டீச்சர்குழந்தைகளுக்கு உண்மையை பேச சொல்லி கொடுங்கள். வீட்டுப்பாடம் செய்யவில்லையென்றால் டீச்சரிடம் உண்மையை பேச சொல்லிக்கொடுங்கள். லீவ் எடுத்தால் உண்மையை சொல்ல சொல்லுங்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். 

தமிழக மாணவர்கள் உலகரங்கில் வளர்ச்சி

இதனை தொடர்ந்து பேசிய இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில், எங்கள் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும் அதுதான் எங்களது முதல் நோக்கம். அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள்  எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும் அந்த இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம்.

அதன் ஒரு வழி தான் இந்த சர்வதேச எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப்  போட்டியை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருகிறோம் இதை மேலும் மேலும் நடத்த மாநில அரசு துணை நின்றால் நிச்சயமாக நாம், நமது இந்திய மாணவர்களை உலக அரங்கில் கல்வியில் சிறக்க செய்வோம் என தெரிவித்தார்.