MBBS Counseling: தமிழகத்தில் மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை நாளை காலை 9 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளியிடுகிறார். தரவரிசைப் பட்டியலை நாளை காலை 9 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வெளியிடுகிறார்.
தமிழகத்தில் உள்ள 8,225 மருத்துவ மற்றும் பல் மருத்துவ இடங்களில் தேசிய அளவிலான 848 இடங்கள் போக மீதமுள்ள 7,377 இடங்களுக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களானது ஆன்லைனில் கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் இம்மாதம் 6ஆம் தேதி வரை வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.