சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வித்திட்டம் 2026- 2027க்கு பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியான மானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
இலவசக் கல்வித்திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி இனநிலைப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2025-2026 கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். வருவாய் துறை வட்டாட்சியர் வழங்கிய வருமான சான்றிதழின்படி மாணவரின் குடும்ப வருட வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எத்தனை சீட்டுகள்?
ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச சீட்கள் ஒதுக்கப்படும் (அதாவது ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு சீட்) இவை பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலே கூடுதல் இடங்களாக அனுமதிக்கப்படும்.
யார் யாருக்கு சீட்டுகள்?
- பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் முக்கிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படும்.
- முதல் பட்டதாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
- முக்கிய பாடங்களில் 80% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்படும்.
- ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
பதிவேற்றம் செய்யவேண்டிய சான்றிதழ்கள்
1) பன்னிரெண்டாம் மதிப்பெண் சான்றிதழ், (கட்டாயம்)
2) சமீபத்திய வருமான சான்றிதழ் (ஒருவருடத்திற்குள்) வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். (கட்டாயம்)
3) முதல் பட்டதாரி சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்).
4) மாற்றுத்திறனாளி சான்றிதழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து (பொருந்தினால்) பெற்றிருக்க வேண்டும்
(5) தாய், தந்தை இறப்பு சான்றிதழ் (பொருந்தினால்)
வருமான சான்றிதழ் அல்லது முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கத் தாமதமானால் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஒப்புதல் சீட்டை பதிவேற்றம் செய்யலாம். சான்றிதழை கலந்தாய்வுக்கு வரும்பொழுது கட்டாயம் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள பொருத்தமான சான்றிதழ்களையும் முடிவுகள் சென்னைப் பல்கலைக்கழக (www.unom.ac.in) இணையத்தளத்தில் +2 தேர்வு வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும்.
மென்பிரதிகளுடன் (softcopies of certificates), பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.unom.ac.in
