இந்திய கார் சந்தையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள கார் நிறுவனம் வோல்க்ஸ்வேகன். இவர்களின் கார்களுக்கு என்று இந்திய சந்தையில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது. 

Continues below advertisement

மீண்டும் வரும் போலோ:

கார் பிரியர்கள் பலரும் வோல்க்ஸ்வேகனின் போலோ காரை மறந்திருக்கவே மாட்டார்கள். 2010ம் ஆண்டு வோல்க்ஸ்வேகன் அறிமுகப்படுத்திய இந்த போலோ கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் விற்பனையானது. ஹேட்ச்பேக் ரக காரான இந்த கார் மிகப்பெரிய வரவேற்பையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்றது. 

ஆனால், இந்த காரின் ப்ரேக், கட்டுப்பாடு ஆகியவற்றில் தொடர்ந்து எழுந்த புகார்கள் காரணமாக இந்த காரை கடந்த 2022ம் ஆண்டு வோல்க்ஸ்வேகன் நிறுவனம் நிறுத்தியது. இந்த சூழலில், இந்த காரை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்த வோல்க்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த முறை பெட்ரோல் மாடலாக இல்லாமல் மின்சார காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Continues below advertisement

454 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த புதிய Volkswagen ID. Polo கார் இரண்டு விதமான பேட்டரி வேரியண்களில் அறிமுகமாக உள்ளது. ஒன்று 37 கிலோவாட் மற்றொன்று 52 கிலோவாட் பேட்டரி ஆகும். 37 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் 329 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. 52 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் 454 கிலோமீட்டர் வரை மைலேஜ் செல்லும் ஆற்றல் கொண்டது. 

இந்தத கார் 114 எச்பி, 132.7 எச்பி மற்றும் 208 எச்பி குதிரைத் திறன் கொண்டது. 10 முதல் 80 சதவீதம் சார்ஜை 23 நிமிடங்களில் ஏற்றிக்கொள்ளலாம். 4 ஆயிரத்து 53 மில்லி மீட்டர் நீளமும், 1816 மி.மீட்டர் அகலமும், 1530 மி.மீட்டர் உயரமும் கொண்டது. இந்த கார் 441 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. ட்ரெண்ட், லைஃப் மற்றும் ஸ்டைல் ஆகிய வேரியண்டகளில் அறிமுகமாகிறது.

விலை:

க்ரூஸ் கன்ட்ரோல், பின்பக்க கேமரா, பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் கொண்டது. 3டி எல்இடி டெயில் லைட்ஸ், இருக்கைகள் வசதி, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதி கொண்டது.  இந்த காரின் 37 கிலோவாட் ரூபாய் 27.65 லட்சமும், 52 கிலோவாட் கார் ரூபாய் 37.38 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலோ கார் மீண்டும் வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மின்சார கார்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், போலோ காரை மின்சார காராக களமிறக்கி தங்களது சந்தையை மேலும் விரிவுபடுத்த வோல்க்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

ஒரே சார்ஜில் 690 கிலோமீட்டர் போலாம்! அறிமுகமாகியது Hyundai Ioniq 5 மின்சார கார் - விலை எவ்ளோ?


Car loan Information:

Calculate Car Loan EMI