Madras University: கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்வு; சென்னைப் பல்கலை. அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Continues below advertisement

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Continues below advertisement

அதேபோல கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம்  15 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு இந்தக் கல்வியாண்டில் இருந்தே (2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல்) நடைமுறைக்கு வருகிறது என்று சென்னை பல்கலைக்கழகம தெரிவித்துள்ளது. 

மார்ச் மாதத்தில் இதற்கான பரிந்துரையை நிதிக் குழு அளித்தது. அதையடுத்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 

எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. 

இந்த சூழலில் பிறகே தொழில்முறைப் படிப்புகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பல்கலைக்கழகங்கள் செயல்படத் தொடங்கின. இதைத்தொடர்ந்து கலை, இளங்கலை, முதுகலை, பிஎச்.டி. உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி 

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

அந்த வகையில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து, இலவசமாக இளங்கலைப் படிப்புகளைப் படித்து வருகின்றனர். 


இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதேபோல கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம்  15 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு இந்தக் கல்வியாண்டில் இருந்தே (2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல்) நடைமுறைக்கு வருகிறது என்று சென்னை பல்கலைக்கழகம தெரிவித்துள்ளது. 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

Continues below advertisement
Sponsored Links by Taboola