தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். எனப்படும் முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்கக இயக்குநர் கூறி உள்ளதாவது:
2023- 2024 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். எனப்படும் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு ( Master of Education (M. Ed.)) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை https://www.tngasa.in/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2/. மொத்தம் ரூ.60/. (ரூபாய் அறுபது மட்டும்) செலுத்தப்படவேண்டும்.
SC / SCA / ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவுக் கட்டணம் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) செலுத்தினால் போதுமானது.
மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் அட்டை/ Credit Card /Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாமிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் The Director, Directorate of Collegiate Education, Chennai - 15 என்ற பெயரில் 25.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: செப்டம்பர் 25, 2023
இணையதள வாயிலாக விண்ணப்ப பதிவு செய்ய இறுதி நாள்: செப்டம்பர் 30, 2023
தொடர்பு எண் : 93634 - 62070, 93634 - 62007, 93634 - 62042, 93634 - 62024.
இவ்வாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பி.எட். சேர்க்கை
2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பான பி.எட். முதலாமாண்டுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்தார். செப்டம்பர்11ஆம் தேதி விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகும்.
உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி கடந்த ஆண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி, அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
பி.எட். படிப்பில் சேர விரும்பும் 50 % மதிப்பெண்களை இளங்கலைப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். எனினும் வகுப்பு வாரியாகத் தளர்வு அளிக்கப்படுகிறது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும் எம்பிசி பிரிவினருக்கு 43 சதவீதமும் பிசி பிரிவினருக்கு 45% மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.tngasa.in