Vijayalakshmi: ”இதுதான் கடைசி வீடியோ; நான் சாக போறேன்.. சீமான் தான் காரணம்" - விஜயலட்சுமி பரபர வீடியோ..!

நானும் என் அக்காவும் சாகப்போகிறோம். இதற்கு காரணம் சீமான் தான் என்று நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

Vijayalakshmi: நானும் என் அக்காவும் சாகப்போகிறோம். இதற்கு காரணம் சீமான் தான் என்று நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

சீமான் - விஜயலட்சுமி விவகாரம்:

தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின் சீமான் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்துவிட்டுச் சென்ற விஜயலட்சுமி கடந்த மாதம் மீண்டும் சீமானை விசாரணை செய்யும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

இந்த புகாரின் பெயரில் வளசரவாக்கம் போலீஸ் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியது.  இதையடுத்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்த நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜரானார். இப்படியாக பிரச்சனை சென்று கொண்டிருக்கும்போது, விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

"நான் சாகப்போகிறேன்”

அதில், ”மான நஷ்ட வழக்கு போடுகிறோம் எனக் கூறி என்னை டார்ச்சர் செய்கிறார்கள். என்னை வாழவிட மாட்டாங்க. என்னையும் என் அக்காவையும் வாழ விடமாட்டாங்க.  இதனால் நான் சாக போகிறேன். இதற்கு சீமானும், நாம் தமிழர் கட்சியும் தான் காரணம். நான் சாகனும் தான் சீமான் இவ்வளவு செய்தார். எனக்கு நான்கு திருமணமாகி உள்ளது என்று கூறி தமிழக மக்களிடம் என்னை அசிங்கப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  இவர்கள் என்னை வாழவிடமாட்டார்கள். அதனால் எங்களது முடிவை நாங்களே எடுத்துக் கொள்கிறோம். எனது அக்காவை தனியாக விட்டு செல்ல விருப்பம் இல்லை. அதனால் அவளையும் அழைத்து செல்ல இருக்கிறேன்.

இனிமே எந்த நம்பிக்கையும் இல்லை. கடந்த 12 ஆண்டாக நரக வேதைனை அனுபவித்துவிட்டேன். நான் சாக வேண்டும் என்பதற்காக தான் சீமான் இதையெல்லாம் செய்தார். அதுதான் தற்போது நடக்க போகிறது. விடியல் கிடைக்கும் என்று தமிழகம் வந்தேன். எனக்கு அது கிடைக்கவில்லை. இதுதான் என்னோட கடைசி வீடியோ. காவல்துறை சீமானை கைது செய்துவிடுங்கள்" என்று அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியுள்ளார். சீமான் மீதான புகாரை திரும்பப் பெற்றுவிட்டு, இனி நான் சென்னை பக்கமே வரமாட்டேன்  என்று கூறி நடிகை விஜயலட்சுமி பெங்களூர் சென்ற நிலையில், மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் காட்டியுள்ளார்.


மேலும் படிக்க 

Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..

Kamal Haasan: ‘நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டி’ - தொண்டர்கள் முன் கமல்ஹாசன் பரபரப்பு அறிவிப்பு..!

Continues below advertisement