சென்னையில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை சட்டப் படிப்பான L.L.M. படிப்பில் சேர டிசம்பர்  20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆப்ரஹாம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் L.L.M. படிப்பில் சேர மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர்  20-ம் தேதி. சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 20 மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். http://tndalu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.


நுழைவுத் தேர்வு


முன்னதாக இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி விதிகளின்படி, எல்எல்எம் எனப்படும் முதுகலை சட்டப் படிப்புக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு (PGCETL) ஒன்றை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். 





எனினும், முதுகலை சட்டப் படிப்புக்கான PGCETL நுழைவுத் தேர்வை இந்திய பார் கவுன்சில் அறிமுகப்படுத்தும் வரை, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பழைய நடைமுறையே அமலில் இருக்கும். PGCETL தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, அந்தத் தேர்வு முடிவை அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே நிலையில், இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆண்டு மட்டுமே படிக்கும் முதுகலை சட்டப் படிப்பு (எல்எல்எம்) நீக்கப்பட உள்ளது. இளங்கலை சட்டப் படிப்பை முடித்தவர்களுக்காக இந்தப் படிப்பை, யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியது. எனினும் இனி வருங்காலத்தில் ஓராண்டுக்கான முதுகலை சட்டப்படிப்பு இருக்காது.


அதற்கு பதிலாக முதுகலை சட்டப் படிப்பு இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட உள்ளது. இதனால் இப்படிப்புகளுக்கு 4 செமஸ்டர்கள் மட்டுமே நடைபெறும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூட்யூபில் வீடியோக்களை காண