சென்னை எருக்கஞ்சேரி லட்சுமி அம்மன் நகர் விசாலாட்சி தெரு பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா (24). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோபிநாத் என்பவருடன் திருமணமாகி கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது அம்மா வீட்டிற்கு வந்து தங்கியிருந்த கிருத்திகா , தனது பெரியம்மா கஸ்தூரியுடன் எத்திராஜ் சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்க்கு பணம் எடுக்கச் சென்றார். அப்பொழுது எருக்கஞ்சேரி எத்திராஜ் சாமி சாலை பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கிருத்திகா கழுத்தில் இருந்து தாலி செயினை பறிக்க முயன்றனர்.

 

அப்போது கிருத்திகா தனது கையால் தாலி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ஒருவர் எழுந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார். மற்றொருவரை  பொதுமக்கள் பிடித்து  கொடுங்கையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் கொடுங்கையூர் தென்றல் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த சதீஷ் (22) என்பதும் இவர் முழு குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இவருடன் செயின் பறிப்பில் ஈடுபட்ட இவரது நண்பரான ரவி என்பவரையும் போலீசர் தேடி வருகின்றனர்.




வியாசர்பாடியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி கைது



 



 


Watch video : ’மாநாடு பட டிக்கெட் வேணுமா?, ஒரு ஓட்டு போடு’ - நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் இளைஞர் காங்கிரஸ்..!


சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் 56 வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் என்கின்ற குள்ள பிரசாத் (28) இவர் மீது வியாசர்பாடி , எம்.கே.பி நகர் , கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, அடிதடி , திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எம்.கே.பி நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து இவர் கடந்த 5 மாதங்களாக  நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனையடுத்து இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் பேரில் வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே எம்.கே.பி நகர் போலீசர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது குள்ள பிரசாத்தை  கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.