Covid-19 chennai Corporation Walk in interview for Lab and Xray Technicians:  ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்பனர்கள் பணிபுரிவது தொடர்பான  வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை மாகராட்சி வெளியிட்டது. 


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் மற்றும் கல்வி தகுதி உள்ள ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்பனர்கள் (X-Ray Technicians) நேரடியாக அசல் கல்வி சான்றிதழ்களுடன் 06.05.2021 மற்றும் 07.05.2021 (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது.


 



பதவியின் பெயர் :  ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians)


காலியிடங்கள் : 100 


கல்வித் தகுதி: Higher Secondary Course + Diploma in Lab Technician Course (2 years Course)  


மாத ஊதியம் : ரூ. 15,000 


பதவியின் பெயர்:  ஊடு கதிர் தொழிற் நுட்பனர்கள் (X-Ray Technicians)


காலியிடங்கள்: 50


கல்வித் தகுதி : X- Ray Technician Course From Govt. Recognized Situtation


மாத ஊதியம் : ரூ. 20,000 


நிபந்தனைகள்: 



  1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது

  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டது 

  3.   பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertking) அளிக்க வேண்டும்.  


இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.