தமிழ்நாடு மாநிலம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர நடத்தப்படும் லாட்டரி முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் காலி இடங்கள் இருந்தால், பொது மக்களுக்கும் பள்ளியில் இடம் வழங்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மொத்தம் 1,256 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 13.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. 

இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர நடத்தப்படும் லாட்டரி முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதைக் காண்பது எப்படி? 

  • Kendriya Vidyalaya Class-1 லாட்டரி முடிவுகளைக் காண, பெற்றோர்கள் எந்த பள்ளிக்கு விண்ணப்பித்தார்களோ, அந்த பள்ளியின் இணையதளத்தைக் காண வேண்டும்.
  • இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள Class-1 Lottery Result என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • கூகுள் டிரைவ் பக்கம் தனியாகத் திறக்கும்.
  • அதில் உள்ள பிடிஎஃப் ஆவணத்தைத் திறந்து மாணவர் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைத் தெரிந்துகொள்ளலாம்.
  • அதில் மாணவர்களின் பெயர், விண்ணப்ப கோடு, பிரிவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.
  • அல்லது https://kvsonlineadmission.kvs.gov.in/login.html என்ற இணைப்பை க்ளிக் செய்து, போதிய விவரங்களை உள்ளிட்டும் தகவலைப் பெறலாம்.

இந்த பிடிஎஃப் ஆவணத்தில் உங்கள் குழந்தையின் பெயர் இடம்பெற்று இருந்தால், தேவையான ஆவணங்களுடன் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குச் சென்று மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளலாம்.

பிடிஎஃப் ஆவணத்தில் பெயர் இல்லாவிட்டால்..

உங்கள் குழந்தையின் பெயர் இல்லாவிட்டால், அடுத்த பட்டியல் வெளியாகும் வரை காத்திருக்கவும். இரண்டாவது பட்டியல் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு https://kvsonlineadmission.kvs.gov.in/helpdesk.html என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.