Kendriya Vidyalaya: கே.வி. பள்ளிகளில் 109 இந்தி, 53 சமஸ்கிருத ஆசிரியர்கள்; தமிழுக்கு ஒருவர்கூட இல்லை: வைரலாகும் அதிர்ச்சி ஆர்டிஐ தகவல்!

தமிழகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ள நிலையில், தமிழுக்கு ஒரு ஆசிரியர்கூட இல்லை என்ற அதிர்ச்சி ஆர்டிஐ தகவல் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

தமிழகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ள நிலையில், தமிழுக்கு ஒரு ஆசிரியர்கூட இல்லை என்ற அதிர்ச்சி ஆர்டிஐ தகவல் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், அவை பொதுத் தரப்பினருக்கும் வழங்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ’இந்தி, சமஸ்கிருதம்  ஆகிய மொழிப்பாடங்கள் கட்டாயமா?’ என்று தகவல் அறியும்  உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்குக் கிடைத்துள்ள பதிலில், ’6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இந்தி, சமஸ்கிருதம் ஆகியவை கட்டாயப் பாடங்கள்’ எனவும் ’9ஆம் வகுப்பு முதல் மொத்தமுள்ள 5 பாடங்களில் இந்தியும் சமஸ்கிருதமும் விருப்பப் பாடங்களாக உள்ளதாக’வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’6 முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக உள்ளதா?’ என்ற கேள்விக்கு இல்லை எனவும் தமிழகம் முழுவதும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளதாகவும், இதில் எந்தப் பள்ளியிலும் தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’தமிழ் மொழித் தேர்வில் தேர்சி பெறாமல் 6ஆம் வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியுமா?’ என்ற கேள்விக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

’தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத மொழி பாடத்திற்குப் பதிலாக தமிழைப் பாடமாகப் பயில முடியுமா?’ என்ற கேள்விக்கு முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை

அதேபோல தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ள நிலையில், தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்த விவரங்கள் சமூக வலைளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், இந்த ஆர்டிஐ கடந்த ஆண்டு பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மழலையர் வகுப்புகள் தொடக்கம்

இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே, கே.வி., பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையே 2020 புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 5 ஆக இருந்த குறைந்தபட்ச வயது, நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து,  'பால்வாடிகா' என்ற பெயரில், ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை அண்மையில் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola