கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி முடிந்த நிலையில், தற்போது ஆஃப்லைன் அதாவது நேரடி முறையில் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 1256 கே.வி. பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 13,53,129 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 56,810 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் பிரதானமாகப் படித்து வருகின்றனர். பொதுமக்களில் சிலருக்கும் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் 2025- 26ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் பாலவாடிகா 2 மற்றும் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சேர நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பிறகு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேவிஎஸ் மாணவர் சேர்க்கை எப்படி? (KVS Admission 2025 Schedule)

  • கே.வி. நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பு - ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 11 வரை
  • முதல் தற்காலிக சேர்க்கை பட்டியல் வெளியீடு - ஏப்ரல் 17
  • சேர்க்கை சாளரம்- ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 21 வரை
  • அனைத்து வகுப்புகளுக்கும் (வகுப்பு 11 தவிர) சேர்க்கைக்கான கடைசி தேதி - ஜூன் 30
  • காலி இடங்கள் இருந்தால் நடைபெறும் கடைசிக்கட்ட மாணவர் சேர்க்கை கெடு- ஜூலை 31.

மாணவர்கள் என்னென்ன ஆவணங்களை சேர்க்கையின்போது சமர்ப்பிக்க வேண்டும்? (KV Admission 2025: Documents Required)

• பிறப்புச் சான்றிதழ்

• முகவரிச் சான்று

• ஆதார் அட்டை

• பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC)

முந்தைய வகுப்பின் மதிப்பெண் பட்டியல்

• வருமானச் சான்றிதழ் (பொருந்தினால்)

• EWS சான்றிதழ் (பொருந்தினால்)

• APAAR ஐடி

• பெற்றோரின் பணி மாற்றுச் சான்றிதழ் (பொருந்தினால்)

பெற்றோர்கள் https://kvsonlineadmission.kvs.gov.in/login.html என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாட்டரி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை அறியலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: https://kvsangathan.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம்.