கரூரில் முதல்வர் விஜய் பேச்சை அரசுப் பள்ளிகள் ஸ்மார்ட் திரையில் ஒளிபரப்பிய காட்சிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Continues below advertisement

கரூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கூட்ட நெரிசலில் பலியான குடும்பத்தினரைச் சந்திக்கவும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் முதல்வர் விஜய் கரூர் வந்தார்.

இணையத்தில் வைரலான காட்சிகள்

அங்கு மக்கள் சந்திப்பையும் நடத்தினார். அப்போது விழா அரங்கில் உரையாற்றினார். முதல்வர் விஜயின் உரை, அரசுப்பள்ளி ஒன்றில் லைவாக ஒளிபரப்பப்பட்டது. இந்த காட்சிகளை மாணவர்கள் ஸ்மார்ட் திரையில் பார்த்தனர். இது எந்தப் பள்ளி என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இதற்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக வெளியான பதிவுகளில், ’’இன்று கரூரில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..!

யார் இதற்கான உத்தரவை கொடுத்தது?

யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார். படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை’’

’’அரசு பள்ளிகளில் வகுப்பறைகளில் டிஜிட்டல் ஸ்க்ரீன் கடந்த ஆட்சியில் பொருத்தப்பட்டது. அதை இந்த ஆட்சியில், முதலமைச்சரின் கட்சி கூட்டங்களை நேரலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒளிபரப்ப பயன்படுத்துகிறார்கள். இது சரியில்லை’’ என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக, ‘’எந்த அரசியல் கட்சியினரும், எந்த தனியார் அமைப்பும் மாணவர்களை நேரடியாக சந்திக்க அனுமதி இல்லை’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக அறிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து, பாராட்டுகள் எழுந்தன.

படிப்பு முக்கியமில்லையா?

எனினும் சுற்றறிக்கை வெளியான அடுத்த நாளே, முதல்வரின் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்களிடம் ஒளிபரப்பலாமா? படிப்பு முக்கியமில்லையா? என்று எதிர்க் குரல்கள் எழுந்து வருகின்றன.