கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்சிக்' (Toxic) திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்களில் இடம்பெற்ற கிளாமரான காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய பாடல் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

Continues below advertisement

சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடலில் யாஷ் மற்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மிகவும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளனர். இருவரின் ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகளை மையமாக வைத்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கியாரா அத்வானியின் தனிப்பட்ட வாழ்க்கையை இந்தப் பாடலுடன் இணைத்து சிலர் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். "இவ்வளவு நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருப்பதை அவரது கணவர் சித்தார்த் மல்ஹோத்ரா எப்படி எடுத்துக்கொள்வார்?" என்ற கேள்வியை எழுப்பி சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. சிலர் இதை ஒரு நடிகையின் தொழில்முறை பணியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்க, மற்றொரு தரப்பினர் குடும்ப வாழ்க்கையுடன் இதை இணைத்து விவாதித்து வருகின்றனர்.

Continues below advertisement

கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக இருவரும் பார்க்கப்படுகின்றனர். மேலும், 2025-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் கியாரா தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் ரசிகர்களுக்கும் கியாரா அத்வானி பரிச்சயமான நடிகைதான். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

டாக்சிக் 

'டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை, சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப். படங்களுக்கு பிறகு யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படம் என்பதால், 'டாக்சிக்' மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.