கர்நாடகாவில் நடந்த ஒரு ஆச்சரியமான நிகழ்வில், 25 வயதான வசீம் வேக் என்ற இளைஞர், தனது நீண்ட நாள் தோழிகளான ஷிஃபா ஷேக் மற்றும் ஜன்னத் மக்கந்தர் ஆகிய இருவரையும் ஒரே திருமண மேடையில் மணந்தார்.

Continues below advertisement

இவர்களின் பால்ய கால நட்பு காதலாக மாறி, குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, கர்நாடக மாநிலம்  சித்ரதுர்கா மாநிலத்தில் ஹோரேபேட்டை பகுதியில் இந்த கூட்டுத் திருமணம் நடந்துள்ளது.

ஒருவரை மட்டும் பிரிந்து வாழ மனமில்லாததால்…

வசீம் வேக், ஷிஃபா ஷேக் மற்றும் ஜன்னத் மக்கந்தர் ஆகிய மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவரை மட்டும் பிரிந்து வாழ மனமில்லாத காரணத்தால், வசீக் சேக் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Continues below advertisement

மூன்று பேரும் தங்களின் குடும்பத்தினரிடம் பேசி இந்த திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளனர். மூன்று பேரின் குடும்பத்து உறுப்பினர்களிடம் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இந்த திருமணம் கர்நாடகாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சாத்தியமான நிகழ்வா?

வசீம், ஷிபா ஷேக் மற்றும் ஜன்னத் ஆகியோரின் இந்த தனித்துவமான திருமண முடிவு, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது காதல் மற்றும் உறவுகளின் வரையறைகளைத் தாண்டி, பரஸ்பர புரிதல் மற்றும் குடும்ப ஆதரவுடன் சாத்தியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் பலரை காதலிப்பதும், அவர்களை ஒரே மேடையில் திருமணம் செய்து கொள்வதும் இந்திய சமூக அமைப்பில் அரிதானது. என்றாலும், இது போன்ற நிகழ்வுகள் காதலுக்கு மொழி, மதம், சமூகக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதையும், தனிப்பட்ட விருப்பங்களும் குடும்ப ஆதரவும் இருந்தால் எத்தகைய உறவுகளும் சாத்தியமே என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

புதிய விவாதங்கள்

இவர்களின் இந்த கூட்டுத் திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், புதிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அதேபோல நைண்டீஸ் கிட்ஸ், ''எனக்கு ஒரு திருமணத்துக்கே வழியில்லை, இங்கே ஒரு ஆணுக்கு 2 பேருடன் திருமணமா?'' என்று வேதனையுடன் கிண்டல் செய்து வருகின்றனர்.