ஆதி திராவிட மாணவர்களுக்கு இதழியல் மற்றும் தொடர்புத் துறையில் ஒரு வார இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. 

Continues below advertisement

சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை இதழியல் கல்லூரி மற்றும் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் ஆகியவற்றுடன் இணைந்து, இதழியல் மற்றும் தொடர்புத் துறையில் ஒரு வார கால இலவச பயிற்சி வகுப்பை அறிவித்துள்ளது. இந்தப் பயிற்சி வரும் 10.11.2025 முதல் 18.11.2025 வரை சென்னை இதழியல் நிலையம், கோட்டூர்புரம், சென்னையில் நடைபெற உள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?

Continues below advertisement

  • தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொண்ட ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) அல்லது மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் (SCC) பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • தமிழ்நாட்டில் உள்ள அரசு அல்லது அரசு உதவி பெறும் அல்லது தனியார் கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் நேரடி முறையில் (Regular Mode) பயின்று இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் (UG அல்லது PG) பெற்றிருக்க வேண்டும்.

  • இதழியல்/ பத்திரிகை மற்றும் ஊடகத்துறை சார்ந்த பட்டப்படிப்புகள் (UG அல்லது PG) அல்லது மக்கள் தொடர்பியல், மொழித்துறை, இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் பயின்று UG அல்லது PG பெற்றிருக்க வேண்டும்.

  • வயது வரம்பு: 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி மற்றும் சலுகைகள்

பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியான 25 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு பயிற்சிக் காலமான 2 மாதங்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகையுடன் கூடிய நேரடிப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய பயிற்சியை, நிறுவனமே கட்டணமின்றி ஏற்பாடு செய்யும். இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 08.10.2025 முதல் 31.10.2025 வரை கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பில் உள்ள க்யூஆர் கோடைப் பயன்படுத்தலாம்.

இந்த அரிய வாய்ப்பை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://docs.google.com/forms/u/0/d/e/1FAIpQLSfld9xnswCai_XqrT_F1AWGXB86KRgmRdip1DZM43ZGzcsRgg/viewform?pli=1 என்ற இணைப்பை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.