தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளத்துடன் பிட்டர் (Fitter) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ்  தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (National Apprenticeship Promotion Scheme -NASA) என்பது இந்தியர்கள் தங்கள் துறையில் பயிற்சிப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய திட்டமாகும். தொழிற்துறையில் பணிக்கான அடிப்படைப் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் செயல்முறை பயிற்சி போன்ற பயிற்சிகள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.





பொதுவாக இத்திட்டத்தின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கு ஆர்வமுள்ள நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் 25 மாதங்கள் அல்லது 10 மாதங்கள் என பணிகளுக்கு ஏற்றவாறு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியின் போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.  அதன்படி தற்பொழுது 10ம் வகுப்பு  படித்திருந்தால், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளத்துனட் பிட்டர் (Fitter) பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணிபுரிவதற்கான அறிவிப்பாக வெளியாகியுள்ள நிலையில், எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? எத்தனை மாதங்கள் பயிற்சி? பயிற்சியின் பொழுது எவ்வளவு சம்பளம் என்பதனை இங்கே அறிந்துக்கொள்வோம்..!


கல்வித்தகுதி:


கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


பணியின் விபரம்


தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் உற்பத்தி மற்றும் தயாரிப்பு (Production and Manufacturing ) பிரிவில் பிட்டர் (fitter) ஆக வாய்ப்பு.


பயிற்சி  காலம்:


25 மாதங்கள் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தின் கீழ் கோயம்புத்தூரில் பிட்டர் (fitter) ஆக பணிபுரிய விரும்புவோர்கள்  https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60f96e398efcd74b163ef3a2 இந்தப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களின் படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.





சம்பளம்:


தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூ.6ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை வருமானம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்டப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://apprenticeshipindia.org/ இணையதள வாயிலாக விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு பலருக்கு பயனளிக்கும் எனத் தெரிகிறது. குறைந்த வேலை பளு உடன் உரிய சம்பளமும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்