தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலியாக உள்ள சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாக கொரொனா தொற்றின் பரவல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தான் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்து வழங்குவோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியமர்த்தப்பட்டுவருகிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள சிகிச்சை உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்,Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Male) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Female) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu போன்ற கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு விண்ணப்பிக்கும் நபர்கள் 18-57 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கான விண்ணப்பத்தினை “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.
இதனையடுத்து விண்ணப்பங்களை ஆய்வு செய்து, முற்றிலும் மெரிட் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக சிகிச்சை உதவியாளராக நியமிக்கப்படுவார்கள். இதில் 53 ஆண் சிகிச்சை உதவியாளர் மற்றும் 82 பெண் சிகிச்சை உதவியாளர் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. இவர்கள் வாரத்தில் வாரத்தில் 6 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு நாளொன்று நாளொன்றுக்கு ரூ.375/-சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும். மேலும் இதுத்தொடர்பான கூடுதல் விபரங்களை https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf என்ற பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.