UGC எனப்படும் பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு மத்திய, மாநில அரசுகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் இடையே பாலமாகத் திகழ்கிறது. மேலும் தேசிய திறனறி தேர்வினை நடத்தி பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பணியிடங்களையும் நிரப்பிவருகிறது.இந்த நிலையில் தற்போது UGC ல் காலியாக உள்ள ஆலோசகர் ( consult) பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு தெரிவித்துள்ள கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக www.ugc.ac.in/jobs என்ற இணையத்தில் மே 31, 2021 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வாயிலாக அனுப்பப்படும் விண்ணப்பங்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்கள், நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் ஆலோசகர் பணியினை மேற்கொள்வதோடு, இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு இடையில் உயர்கல்வியில் உலகளாவிய வளர்ச்சியை எவ்வகையில் ஊக்குவிப்பது போன்ற ஆலோசனைக்கு உதவு செய்பவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை ஊதியம் பெறும் இவர்களுக்கு செயல்திறனின் அடிப்படையில் மேலும் பணியினை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பினை Welcome to UGC, New Delhi, India,Microsoft Word – Advt-Consultants-NEP (ugc.ac.in), Microsoft Word – Advt-Consultants-IC (ugc.ac.in) என்ற இணையத்தின் வாயிலாக அறிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.