JEE Exam Tips: ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான கடைசி நேர டிப்ஸ்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.


ஜேஇஇ தேர்வுகள்:


ஜேஇஇ (கூட்டு நுழைவுத் தேர்வு) என்பது பொறியியல் கல்லூரிகளில் சேர நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வு JEE முதன்மை மற்றும் JEE அட்வான்ஸ் என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.  எனவே விண்ணப்பதாரர் கணினி பற்றிய போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும். ஜேஇஇ என்பது உலக அளவில் கடினமான தேர்வுகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஜேஇஇ தேர்வு நாளை தொடங்கி வரும் பிப்ரவரி 1ம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சில முக்கிய டிப்ஸ்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மாணவர்களுக்கான முக்கிய டிப்ஸ்கள்:



  • தேர்வு நடைபெறும் காலகட்டத்தில் குறைந்தபட்சம் 4 முதல் 5 மாதிரி தேர்வுகளை  எழுதி பார்க்கவும்

  • மாதிரி மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (PYQs) தேர்வுக்கான சூழல் மாதிரியிலேயே எழுதி பாருங்கள்

  • இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் உள்ள அனைத்து அத்தியாயங்களின் முக்கியமான ஃபார்முலாக்களை அலசி பார்க்கவும், இது கேள்விகளுக்கான சரியான பதில்களை எட்டஉதவிகரமாக இருக்கும்

  • JEE முதன்மைத் தேர்வுக்கு முந்தைய வாரத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவோ அல்லது புதிய புத்தகத்தைப் பார்க்கவோ வேண்டாம்

  • ரிவைஸ் செய்து பார்க்க உங்கள் கையால் எழுதப்பட்ட குறிப்புகளை மட்டும் பார்க்கவும்

  • ஒவ்வொரு மணி நேர படிப்புக்குப் பிறகும் 5-10 நிமிடங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஓய்வானது உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்து, சோர்வைக் குறைத்து, செறிவை மேம்படுத்த உதவுகிறது.

  • 6 முதல் 7 மணிநேர தூக்கத்தை உள்ளடக்கிய ஒரு நிலையான வழக்கத்தை பின்பற்றுங்கள்

  • உடல் நலத்துடன் இருக்க ஆரோக்கியமான மற்றும் வீட்டில் சமைத்த உணவை விரும்புங்கள்

  • ஒவ்வொரு நாளும் குறுகிய தியானம் / தளர்வு பயிற்சிகள் கவனம் செலுத்தவும் உதவும்


தேர்வுக்கான திட்டங்கள்:  


சரியான திட்டமும் நேர மேலாண்மையும் தேர்வரின் தரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்வரும் டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும்:



  • முதலில் முழு வினாத்தாளையும் முழுமையாக படித்து பாருங்கள்

  • குறைந்த ஆபத்து மற்றும் அதிக ஆதாயம் கொண்ட பிரிவுகளைத் (SECTIONS) தேர்வு செய்யுங்கள்

  • முதலில் எளிதான கேள்விகளை முயற்சிக்கவும். உங்களுக்குத் தெரியாத கேள்வியுடன் தொடங்க வேண்டாம்.

  • எதிர்மறை மதிப்பெண்களை ரத்து செய்வதற்கான கேள்வியைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால் அதனை தொட வேண்டாம்

  • எந்தப் பிரிவும் கடினமாக இருந்தால் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் மற்றவற்றில் மதிப்பெண் பெறலாம்.

  • தேர்வை எழுதும்போது அவ்வப்போது நேரத்தை சரிபார்க்கவும்

  • இரண்டு சுற்றுகளாக தேர்வை எழுத முயற்சியுங்கள் -  முதல் சுற்றில் விடை தெரியாத கேள்விகளுக்கு இரண்டாவது சுற்றில் பதில் தெரியலாம்

  • வினாத்தாள் கடினமாகக் இருந்தால் பதற்றப்பட வேண்டாம்.  ஏனெனில் இது உங்களுடைய செயல்திறனை பாதிக்கலாம்


தேர்வுக்கு முந்தைய நாளில் செய்ய வேண்டியது என்ன?



  • நேர்மறையான எண்ணங்கள கொண்டிருங்கள்

  • தேர்வுக்கு தயாரானதைப் பற்றி விவாதிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் நன்கு தயாராக இருந்தாலும் விவாதம் உங்களை பதற்றமடையச் செய்யலாம்

  • ஜேஇஇ மெயினுக்கு ஒரு நாள் முன்பு புதிதாக எதையும் படிக்க வேண்டாம்

  • உங்களை நம்புங்கள், அமைதியாக, நம்பிக்கையுடன் இருங்கள்

  • அனைத்து முக்கியமான ஃபார்முலாக்களையும் ரிவைஸ் செய்யுங்கள்

  • உங்களால் தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்

  • குறைந்தது 6-7 மணிநேரம் நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள்

  • ஹால் டிக்கெட்டை எடுத்துச் செல்வதை உறுதிசெய்து, ஹால் டிக்கெட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

  • தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்தை அடையுங்கள்.