2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாவது அமர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதைக் காண்பது எப்படி? காணலாம். 

Continues below advertisement

அதே நிலையில், தேர்வு முடிவுகள் நாளை (ஏப்.19) வெளியாகும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாவது அமர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு, கேள்வித் தாள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பதில்களை தேசியத் தேர்வுகள் முகமை அண்மையில் வெளியிட்டது. இதில், பல்வேறு குளறுபடிகள், தவறுகள் நிகழ்ந்திருப்பதாக மாணவர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

Continues below advertisement

9 கேள்விகளில் குளறுபடிகள்

தேசியத் தேர்வுகள் முகமை அண்மையில் தற்காலிக விடைக் குறிப்பை வெளியிட்டது. இதில் 9 கேள்விகள் தவறாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இயற்பியல் பாடத்தில் இருந்து 4 கேள்விகள், வேதியியல் பாடத்தில் 3 வினாக்கள் மற்றும் கணிதப் பாடத்தில் 2 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்தது. எனினும் இது தற்காலிகமான விடை மட்டுமே. இறுதி விடைக் குறிப்புகள் விரைவில் வெளியாகும் என்று என்டிஏ அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில், இறுதி விடைக்குறிப்புகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 

விடைக் குறிப்புகளைக் காண்பது எப்படி?

ஸ்டெப் 1: JEE முதன்மை தேர்வு முடிவுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை jeemain.nta.nic.in பார்வையிடவும்.
 
ஸ்டெப் 2: “மதிப்பெண் அட்டையைக் காண்க” அல்லது “JEE முதன்மை 2025 அமர்வு இரண்டின் முடிவைக் காண்க” என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
 
ஸ்டெப் 3: உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
 
ஸ்டெப் 4: உங்கள் முழுமையான NTA JEE முதன்மை தேர்வு முடிவு திரையில் தோன்றும், உங்கள் மதிப்பெண்களைக் காண்பிக்கும்.
 
ஸ்டெப் 5: எதிர்கால குறிப்புக்காக JEE முடிவு பக்கத்தை அச்சிட்டு சேமித்துக் கொள்ளுங்கள்.
 

கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/