அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களுக்கான சேர்க்கை 13.06.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Online-ல் www.skilltrainint.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 10.05.2024 முதல் பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 07.06.2024 என் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 13.06.2024 நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும் விண்ணப்பங்கள் இலவசமாக பதிவு செய்திடவும் கீழே குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.
தொழிற்பயிற்சி படிப்பதால் தொழில் நிறுவனங்களில் எளிதில் வேலை கிடைக்கும். தொழிற்பெயர்ச்சி படித்தவர்கள் அதன் பிறகு அவர்கள் டிப்ளமோ மற்றும் டிகிரி ஆகியவற்றையும் பயில முடியும்
இணையதள முகவரி |
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் கால அளவு |
10.05.2024 முதல் 13.06.2024 |
மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம். |
9789242292, 9499937449 9445943451, 8838277278 9597201321, 9080720466
|