தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 305 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கிவருகின்றன. இவற்றில்‌ தற்போது 2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.


ஐடிஐயில் பயிற்சி பெற மாணவர்கள் நாளை முதல் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


இதுகுறித்து வேலை வாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை ஆணையர்‌ தெரிவித்துள்ளதாவது:


தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற 8-ம்‌ வகுப்பு / 10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்‌ விண்ணப்பங்களை https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்கில்‌ நாளை (10.05.2024) முதல்‌ விண்ணப்பிக்கலாம்‌. அதற்கான கடைசி தேதி 07.06. 2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இணையதளத்தில்‌ பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள்‌, தமிழகம்‌ முழுவதும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள்‌ மூலமாக சேர்க்கைப் பதிவை மேற்கொள்ளலாம்‌ என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மற்றும்‌ தொலைபேசி விவரம்‌ https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும்‌, தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில்‌ ஏதேனும்‌ ஐயம்‌ ஏற்படும்‌ நேர்வில்‌, கீழ்க்காணும்‌ மின்னஞ்சல்‌ முகவரியிலும்‌ அலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌.


மின்னஞ்சல்‌ முகவரி : itiadmission2024@gmail.com


அலைபேசி எண்‌ மற்றும்‌ whatsapp எண்‌: 9499055689


இவ்வாறு வேலை வாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.


10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை (மே 10) வெளியாக உள்ளன. முன்னதாக தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச் 26ஆம் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கின. தொடர்ந்து ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு முடிந்தது.


இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 9.1 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இவ்ர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து ஐடிஐ பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.