பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான மின்வெட்டு நிலவி வந்தது. இந்த மின்வெட்டால் பல பகுதிகளில் மக்கள் கடும்அவதிக்குள்ளாயினர். இது குறித்து எதிர்கட்சிகள் உட்பட பலர் ஆளும் கட்சியின் மீது விமர்சனங்களை முன்வைத்த நிலையில், இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வரும் காலங்களில் மின்வெட்டு ஏற்படாது என்று அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பேசினார். 


 






இதனிடையே தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்கி வருகிற 28-ந் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற 6-ந் தேதி தொடங்கி 30-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்தக் காலங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை ஏற்படக்கூடாது என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சார்பில் இருந்து சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. 


 அந்த சுற்றறிக்கையில், “பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின் பாதைகள் பற்றி ஆய்வு செய்திருக்க வேண்டும். பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் தேர்வின் போது தடை ஏற்பட கூடாது. தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். பழுதடைந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்" என பல அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண