சென்னைப் பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகள் வருவமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் நிதி சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2027-18 முதல் 2020-21 வரை ரூ.424 கோடி வரு நிலுவை வைத்துள்ளதால் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதற்குதுணைவேர்ந்த நியமிக்கப்படுதில் நீடிக்கும் தாமதம் காரணத்தில் இப்படியான குழப்பம் ஏற்பட்டுள்ளதாக  பல்கலைக்கழகம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் நிதி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உயர்கல்வித் துறை விளக்கம்


வங்கிக் கணகுக்குளை மீண்டும் பயன்படுத்த தமிழ்நாடு அரசு அதிகாரிகள், பல்கலைக்கழகம் சார்பில் வருமான வரித்துறையினரிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கால நீட்டிப்பு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. வருவமான வரித்துறைக்கு ஆவணம் தாக்கல் செய்யாததால் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.