சர்வதேச விண்வெளி வார விழா இணைய வழி வினாடி வினா மற்றும் வான் நோக்கும் நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குகொள்ள, கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழாவாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்த வாரத்தினில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. 


அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் 8ஆம் தேதி இணைய வழியில் வினாடி வினாவும் இரவு வான் நோக்கும் நிகழ்ச்சியும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனைகள் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியாவின் வரலாறு ஆகிய தலைப்பில் அவரவர் வீடுகளில் இருந்து வினாடி வினா நிகழ்வில் பங்கேற்கலாம். 



அன்று மாலை 6:30 மணி முதல் 8.30 மணி வரை நிலவோடு பேசுவோம் என்ற தலைப்பில் இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காந்திநகர் அருகில் உள்ள செல்லம் நகர் குடியிருப்பு மைதானத்தில் மிகச்சிறந்த தொலைநோக்கிகளுடன் வான்நோக்கும் நிகழ்ச்சி நடைபெறும். வான் நோக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு கேட்கப்படும் வினாக்களுக்கு சரியாக பதிலளிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 


பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழுழ்


வினாடி வினாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழிச் சான்றிதழும், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் நேரடியாக வழங்கப்படும். மேற்காணும் நிகழ்வுகளில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் கீழ்காணும் தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். 


பதிவு செய்ய: https://forms.gle/BCdLJfBbe5zNBiYQ6


மேலும் தகவல்களுக்கு:


கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர்- கலிலியோ அறிவியல் கழகம் 


தொலைபேசி எண்: 8778201926. 


இ-மெயில்: galilioscienceclub@gmail.com




இதையும் வாசிக்கலாம்


Single Girl Child Scholarship : ஒற்றை பெண்குழந்தையா உங்களுக்கு? என்னென்ன ஸ்காலர்ஷிப் இருக்கிறது? எதற்கு விண்ணப்பிக்கலாம்?https://tamil.abplive.com/education/scholarship-for-women-6-programs-indian-students-must-know-about-77314/amp


NMMS Scholarship Scheme: 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் மத்திய அரசு உதவித்தொகை: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- முழுவிவரம் https://tamil.abplive.com/education/nmms-scholarship-scheme-national-means-cum-merit-scholarship-scheme-how-to-apply-eligibility-other-details-77429/amp/amp 


Temporary Teachers : எல்கேஜி, யூகேஜி ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளை விட குறைந்த ஊதியமா?- ராமதாஸ் கேள்வி https://tamil.abplive.com/education/lkg-ukg-nursery-school-teachers-paid-less-than-daily-wage-workers-pmk-ramadoss-question-77585/amp