இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான இன்போசிஸில், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பினை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 35000 பட்டதாரிகளை பணி அமர்த்துவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில்,  ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களுருவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய பன்னாட்டு நிறுவனம் தான் இன்போசிஸ். குறிப்பாக  கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பல ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து வெளியேற்றினர். குறிப்பாக கடந்த ஜூன் காலாண்டில் வெளியேறிவர் விகிதம் 13.9 சதவீத இருக்கிறது. அதோடு மார்ச் காலாண்டில் 10.9 சதவீத உள்ளது. இந்த தேவைகளையெல்லாம் ஈடுகட்டும் விதமாகத்தான் கல்லூரிகளில் முடித்த மாணவர்களை வேலைக்கு எடுக்க இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, நிறுவனததின் தலைமை செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ் தெரிவித்திருந்தாார். அதன்படி இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பணியாளர்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது.



இன்போசிஸின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான சிஸ்டர் இன்ஜினியர் பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.  இதற்கு பி.இ/ பி.டெக். எம்.இ/ எம்.டெக் பட்டதாரிகள் மற்றும், எம்.சி.ஏ/ எம்.எஸ்.சி பயின்றவர்களில் கணினி அறிவியல்/ மின்னணுவியல்/ கணிதம்/ புள்ளிவிவரம் படிப்புகளைக் கொண்டவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பட்டப் படிப்பில் படித்த அனைத்துப் பாடங்களிலும் சராசரியான அளவில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் எனவும்  2021 இல் தேர்ச்சி பெற்று வெளியே வரும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு  கடந்த 6 மாதங்களில் இன்போசிஸ் மற்றும் இன்போசிஸ் குழு நிறுவனங்கள் நடத்திய தேர்வு செயல்பாட்டில் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்திருக்க கூடாது எனவும் நிபந்தனைகளை அறிவித்துள்ளது.


எனவே மேற்கண்ட தகுதியும் , விருப்பமும் உள்ள பட்டதாரிகள் இன்போசிஸ் அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.infosys.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள தகவல்களின் படி விண்ணப்பங்களை ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செயல்முறை, ஆன்லைன் மதிப்பீட்டு சோதனை, நேர்காணல் மற்றும் சோதனை முறை நடத்தி தகுதியுள்ள நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




குறிப்பாக கடந்த நிதி ஆண்டில் 21,000 புதிய வேலைவாய்ப்புகளை இன்ஃபோசிஸ் வழங்கி இருக்கிறது. மேலும் ஜூன் காலாண்டில் மட்டும் 8300 நபர்களுக்கு வேலை வழங்கி இருக்கிறது. தற்போதைய நிலையில் 2.67 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில் பெண் பணியாளர்களின் பங்கு 38.6 சதவீதமாக இருப்பதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.