2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான எம்.டி. யுனானி மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை இன்று (நவ.4) முதல் தொடங்கி உள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் சென்னையில் உள்ள இடங்களுக்கு, 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (யுனானி) - மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக 2023-ஆம் ஆண்டிற்கான யுனானி மருத்துவப் பட்டப்படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( AIAPGET 2023 — Unani) எழுதி, தேவையான தகுதி சதமான மதிப்பெண் பெற்றவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
* விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை https://tnhealth.tn.gov.in/ என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் வாசிக்கலாம்: CBSE Exams 2024: 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் எப்போது? - தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ!
* விண்ணப்பங்கள் ஆணையரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது. மேலும், அடிப்படைத் தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களை https://tnhealth.tn.gov.in/ என்ற வலைதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
* விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 04.11.2023 முதல் 15.11.2023 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 15.11.2023 மாலை 05.30 மணி வரை.
* விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி:
"செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106."
* விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.
* கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.
* கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்து விடுவார்கள்.
* விண்ணப்பப் கட்டணம் - 3000/- ரூபாய்
* விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ. இ சேவை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
* கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், தபால் / கூரியர் சேவையினால் ஏற்படும் கால தாமதத்திற்கு தேர்வுக் குழு பொறுப்பாகாது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: கருத்துச் சுதந்திர நசுக்கலா? போலி செய்திகளை தவிர்க்கவா? தமிழ்நாடு அரசின் உண்மை அறியும் குழு எதற்கு? எப்படி செயல்படும்?