சுருக்கெழுத்தாளர், கீழ்நிலை உதவியாளர், பல்துறை பணி உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை   டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான இந்திய சபை, (ஐ.சி.எப்.ஆர்.இ.) வெளியிட்டுள்ளது. 

இந்திய மழைக்காடுகள் நிறுவனம் என்றழைக்கப்படும் இந்த சபை  சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுயேச்சை அமைப்பாக விளங்குகிறது. 

காலிப் பணியிடங்கள்:  

பணியிடங்கள் 

எண்ணிக்கை 

Technical Assistant

9

stenographer

02

Lower Division Clerk

09

Technician

03

Forest Guard

03

Multi tasking Staff

16

ஆட்சேர்ப்புத்  தேர்வுக்கட்டணமாக ரூ.500 மற்றும் விண்ணப்ப்ப செயல்முறை கட்டணமாக ரூ.800  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும்  தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறத் தகுதி உடைய   எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / மாற்றுத்திறனாளிகள் (ஓஎச்/எச் எச்/விஎச்/மற்றவர்கள்) உள்ளிட்ட பிரிவினருக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து மட்டும்  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும்.  

மேலும், மத்திய அரசின் உத்தரவுப் படி இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்,  பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான வயதுவரம்பில் தளர்வுகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: இந்தத் தேர்வுக்காக கல்வித் தகுதி விதிமுறை 10 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ அல்லது இணையான தேர்வு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முக்கியத் தேதிகள்: 

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் 07.02.2022 முதல், 05.03.2022 (நள்ளிரவு மணி 11.59 வரை) விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான உத்தேசமான தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.  

கல்வித்தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், இந்திய மழைக்காடுகள் நிறுவனத்தின்  https://tfri.icfre.gov.in/direct-recruitment , https://www.mponline.gov.in/  வலைதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு: 

https://tfri.icfre.gov.in/direct-recruitment