சுதந்திர தினம் நெருங்கிவரும் வேளையில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில், எளிதாக கலந்துகொள்வது எப்படி? காணலாம்.

Continues below advertisement

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்கள் வியர்வையையும் ரத்தத்தையையும் சிந்தி அரும்பாடுபட்டு, அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டனர்.

இந்த தினத்தில் குழந்தைகள் சுதந்திர தினப் போட்டிகளில் என்ன பேசலாம்? எழுதலாம்? இதோ டிப்ஸ்!

Continues below advertisement

  1. அனைவருக்கும் வணக்கம். நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடுகிறோம்.
  2. அது என்ன சுதந்திர தினம்? எதற்காக, யாரிடம் இருந்து, ஏன் சுதந்திரம் பெற்றோம்?
  3. இதைத் தெரிந்துகொள்ள நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
  4. அப்போது இந்தியா முழுவதும் பல்வேறு மாகாணங்களாய், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது.
  5. மாபெரும் தலைவர்களான மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் மக்களின் உதவியோடு விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  6. உயிரை துச்சமென மதித்த தலைவர்களின் வீரத்தையும் மக்களின் தியாகத்தையும் கண்ட ஆங்கிலேயே அரசு நமக்கு சுதந்திரத்தை வழங்கியது.
  7. இந்த நன்னாளில் தேசத்தின் ஒற்றுமையைக் காப்போம், நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்போம்.
  8. ஜெய் ஹிந்த்.. நன்றி!  

பேசும்போது எதையெல்லாம் மாணவர்கள் செய்ய வேண்டும்?

  • தெளிவாகவும் சத்தமாகவும் மரியாதையாகவும் பேசுங்கள்.
  • மெதுவாகவும் தன்னம்பிக்கையோடும் வாய்ப்புள்ள இடங்களில் கண்களைப் பார்த்தும் பேசுங்கள்.
  • விடுதலை, ஒற்றுமை, மரியாதை உள்ளிட்ட வார்த்தைகளைக் கூற மறக்காதீர்கள்.
  • முடிக்கும்போது ஜெய் ஹிந்த் சொல்ல மறக்காதீர்கள்.
  • சிறப்பாகப் பேச, கண்ணாடி முன்னால், நண்பர்கள், குடும்பத்தினர் முன்னால் பயிற்சி எடுங்கள்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!