Nissan New SUV: க்ரேட்டாவிற்கு போட்டியாக தயாராகி உள்ள நிசானின் புதிய எஸ்யுவில் என்ன மாதிரியான அம்சங்களை எதிர்பார்க்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

க்ரேட்டாவிற்கு போட்டியாக நிசானின் புதிய எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் வகையில், 2027ம் ஆண்டுக்குள் தனது பல புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யுவி ஆகும். க்ரேட்டாவிற்கு போட்டியாக உருவாக்கி வரும் தனது எஸ்யுவி தொடர்பான டீசரை கடந்த ஆண்டே நிசான் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான், முதன்முறையாக இந்த காம்பேக்ட் எஸ்யுவி இந்திய சாலைகளில் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

டஸ்டர் அடிப்படையிலான எஸ்யுவி - வெளிப்புற விவரம்

நிசானின் புதிய காம்பேக்ட் எஸ்யுவியின் ஒட்டுமொத்த வடிவமைப்பானது, கடந்த ஆண்டு வெளியான டீசரை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக உள்ளது. சாலை பரிசோதனையில் ஈட்பட்ட காரின் வெளிப்புறம் ஒட்டுமொத்தமாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறது. புதிய தலைமுறை டஸ்டருடன் ஒப்பிடுகையில், நிசானின்  எடிஷனானது வித்தியாசமான முன் மற்றும் பின்புற அமைப்பை கொண்டுள்ளது. கூர்மையான எல்இடி முகப்பு விளக்குகள், பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், முழு அகலத்திற்குமான எல்இடி ஸ்ட்ரிப், க்ரில்லில் க்ரோம் ட்ரிம்கள் ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளன. டீசரில் இருப்பதை போன்றே C வடிவிலான எலிமெண்ட்கள் உள்ளன. நிமிர்ந்த மூக்கு மற்றும் செதுக்கப்பட்ட பானட் வடிவமைப்பை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் ஸ்குவார்டட் சக்கரங்கள், அலாய் வீல்களுக்கு கரடுமுரடான அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ORVM-கள் இணைக்கப்பட்ட டர்ன் சிக்னல்ஸ், கன்வென்ஷனல் கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக ரூஃப் ரெயில்ஸ், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரேக்ட் விண்ட்ஷீல்ட், கரடுமுரடான பம்பர் மற்றும் ஸ்போர்டி ஹெட்லேம்ப் ஆகிய அம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டஸ்டர் அடிப்படையிலான எஸ்யுவி - உட்புற விவரம்

நிசானின் காம்பேக்ட் எஸ்யுவி ஆனது பெரும்பாலான உட்புற அம்சங்களை புதிய தலைமுறை டஸ்டரிலிருந்து அப்படியே கடன் வாங்குகிறது. அதன்படி, 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் ட்ரைவர் டிஸ்பிளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே அம்சங்கள் இடம்பெறக்கூடும். ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், USB - C போர்ட், ஏசி வெண்ட்கள் மற்றும் சாஃப்ட் டச் மெட்டீரியல்களும் இடம்பெறலாம். 

டஸ்டர் அடிப்படையிலான எஸ்யுவி - பாதுகாப்பு அம்சங்கள்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நிசானின் புதிய காரில், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரியர் பார்கிங் சென்சார்கள் & கேமரா, டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இடம்பெறக்கூடும். டாப் வேரியண்ட்களில் ADAS அம்சம் வழங்கப்படலாம். இதில் அடானமஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங், லேன் கீப்/டிபார்ட்சுர் அசிஸ்ட், ட்ராஃபிக் சைன் ரிகக்னைஷன், ட்ரைவர் அட்டென்ஷன் அலெர்ட், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் 360 டிகிரி மல்டிவியூ கேமரா ஆகிய வசதிகள் அடங்கும்.

டஸ்டர் அடிப்படையிலான எஸ்யுவி - இன்ஜின் விவரங்கள்

நிசானின் புதிய காம்பேக்ட் எஸ்யுவியில், டஸ்டரில் இருக்கும் இன்ஜின் ஆப்ஷன்கள் சர்வதேச சந்தைக்கு அப்படியே தொடரக்கூடும். ஆனால், இந்திய சந்தைக்கு சற்றே மாறுபடலாம். சர்வதேச சந்தைகளில் இந்த காரானது, 1.0 லிட்டர் பெட்ரோல் எல்பிஜி பை-ஃபியூவல் இன்ஜினை கொண்டு 100PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடும். 1.2லிட்டர்  டர்போ பெட்ரொல் இன்ஜின் ஆப்ஷன் ஆனது 48v 2மைல்ட் ஹைப்ரிட் அமைப்பை கொண்டு 130PS ஆற்றலை வழங்கக்கூடும். கூடுதலாக, இரண்டு மின்சார மோட்டார்களை கொண்ட 1.6 லிட்டர் வலுவான ஹைப்ரிட் இன்ஜின் ஆனது 140PS ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடும்.

ஆனால், இந்திய சந்தைக்கு இந்த புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆனது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே பெறும் என கூறப்படுகிறது. இடைவேளைக்கு பிறகு அவை ஹைப்ரிட் ஆப்ஷன்களை பெறக்கூடும். தேர்ட் பார்ட்டி ஆப்ஷன் மூலம் சிஎன்ஜி சலுகையை வழங்கவும் நிசான் திட்டமிட்டுள்ளது. 

டஸ்டர் அடிப்படையிலான எஸ்யுவி - வெளியீடு?

நிசானின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆனது 2026ம் ஆண்டில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.  தொடர்ந்து 2027ம் ஆண்டில் 7 இருக்கைகளை கொண்ட எடிஷனும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  க்ரேட்டாவிற்கு போட்டியான இந்த புதிய எஸ்யுவியின் விலையானது 11 லட்ச ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI