சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் கோரிக்கை விடுத்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தாள்-1 மற்றும் தாள் 2 ஆகியவை 15.11.2025 மற்றும் 16.11.2025 அன்று மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றன. இரு தேர்வுகளிலும் 3.75 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்றனர். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தகுதித் தேர்ச்சி பெறுதல் அவசியமான பணியில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

டெட் தேர்ச்சி கட்டாயம்

கல்வி உரிமைச் சட்டம் (RTE Act 2009) அமலுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் TET தேர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இது முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத தகுதி நிபந்தனையாக மாறியுள்ளது. இந்நிலையில், பல வருடங்களாகப் பள்ளிக் கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், தங்கள் சேவைத் தொடர்ச்சி, பதவி உயர்வு மற்றும் ஊதிய மேம்பாட்டை நிலைநிறுத்திக்கொள்ள, TET தேர்ச்சி பெற வேண்டிய கட்டாய ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

இத்தகைய நிலையில். TNTET தேர்விற்கான தற்போதைய 55 சதவீத (82/150) குறைந்தபட்ச தகுதி அளவு, அனுபவமிக்க ஆசிரியர்களுக்கு நடைமுறை சவால்களை உருவாக்குகிறது.. இவர்களின் பணிச்சுமை, வயது சார்ந்த காரணிகள், பாடசாலைச் செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பார்க்கும்போது, தகுதி சதவீதத்தை மறுபரிசீலனை செய்வது இன்றியமையாததாக தெரிகிறது.

அரசு பரிசீலனைக்கான வலுவான காரணங்கள்

1. தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு இரு வேறு நடைமுறைகள்

TET தேர்வு தகுதி உறுதிப்படுத்தும் தன்மையை மட்டுமே கொண்டது. நியமனம் தனித்தனி போட்டித் தேர்வு. ஒதுக்கீடு மற்றும் தகுதிச் சான்றுகள் மூலம் நடைபெறும்.எனவே தகுதி சதவீதத் தளர்வு நியமன வாய்ப்பினை பாதிப்பதில்லை.

2. பணியில் உள்ள ஆசிரியர்களின் அதிகளவு பங்கேற்பு

இந்த ஆண்டு பணியில் உள்ள ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

3. இந்திய மாநிலங்களின் சமீபத்திய நடைமுறைகள்

பல மாநிலங்களில் தகுதி சதவீதம் ஏற்கனவே 50% அல்லது அதற்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஆந்திர மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு பிறகு தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது

இந்த மாநிலங்களில் கல்வித் தரம், நியமனம், நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மாநிலக் கல்வித் துறையின் நிலைத்தன்மை மற்றும் மாணவர் நலன்அனுபவமிக்க ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றுவதை உறுதி செய்வதும் மாணவர்களுக்குத் தரமான முன்ணேற்றத்துக்கும் அவசியமானது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை அனைத்து பிரிவினருக்கும் குறைத்திட வேண்டுகோள்:

  1. 2025 TNTET தான்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான தகுதி குறைந்தபட்ச மதிப்பெண்களைதற்போதைய 50% இலிருந்து 50% ஆக மாற்றி, அதற்கான உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்"
  2. தற்போது தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்திற்கு என்று தனித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆகவே தகுதி தேர்வு என்பது ஏற்கனவே முறையான தகுதி பெற்ற ஆசிரியர்களை சோதிக்கும் ஒரு தேர்வு என்பதால் அதனுடைய தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதால் கல்வித் தரம் பாதிக்கப்பட்டது.
  3. பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் த குதித் தேர்வு எழுதும் அனைவருக்கும் தங்கள் பணி வாய்ப்புக்கும் பணியில் தொடரவும் தகுதித் தேர்வு மதிப்பெண்களை 50% ஆக குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில உயர் மட்டக் குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் வலியுறுத்தி உள்ளார்.