கரூர்/ கோயம்புத்தூர் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக 3 மாத கால நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்கு முன்பதிவு செய்யக் கடைசி நாள் ஜூன் 12 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐஐடி சென்னை ப்வர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம், மாணவர்களுக்கு தொழில் துறைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க புதிய முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.


இதில் தகவல் தொழில்நுட்பம் / உள் கட்டமைப்பு மற்றும் தகவல் உதவி மையம் போன்றவற்றுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தப்படும். லைட்ஸ்ரோம் (https://lightstorm.net/) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


பாடங்கள் என்னென்ன?


நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் ஃபண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், வின்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் அண்ட் பேக்அப் அடிப்படைகள், தனித்திறன்கள் போன்றவை இந்த பாடநெறியில் இடம்பெறும். பயிற்சி பெறும் மாணவர்களை ஐஐடிஎம் ப்ரவர்த்தக் தேர்வு செய்து, அவர்களுக்கு மேற்கண்ட அம்சங்களில் தொழில்துறைக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளித்து தயார்படுத்தும்.


இந்த பயிற்சித் திட்டம் ஜூலை 2024 முதல் வாரத்தில் தொடங்கும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 12 2024. விருப்பமுள்ள மாணவர்கள் பின்வரும் இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். https://forms.gle/7RhAKgrGRgwr17zd6


இத்திட்டம் பற்றிய சில விவரங்கள்


* பயிற்சி முற்றிலும் இலவசம், பயிற்சிக்கான காலம் 3 மாதங்கள்


* மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது


* வகுப்பு அடிப்படையிலான பயிற்சித் திட்டமாக இருக்கும்


* பாடநெறியின் உள்ளடக்கம்- நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் ஃபண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், வின்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் அண்ட் பேக்அப் அடிப்படைகள் மற்றும் தனித்திறன்கள் 


* தேவைப்படும் தகுதிகள்- 2023, 2024 பிஎஸ்சி தேர்ச்சி (தகுதியான பாடத்திட்டம்- கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரித் தொழில்நுட்பம்), பிசிஏ மாணவர்கள், குறைந்தபட்சம் 60% சராசரி மதிப்பெண்கள் அவசியம்.


* பயன்கள்- சிறிய அளவிலான, நடுத்தர அளவிலான நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப உதவிப் பிரிவில் சேருவதற்கு மாணவர்களைத் திறமைப்படுத்துதல்


* மாணவர்களின் இருப்பைத் தெரிவிக்கும் வகையில் மாதிரி நேர்காணல்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்பு உதவி வழங்கப்படும். வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.


* தற்காலிக தொடக்க நாள்- ஜூன் 2024


தொடக்கம்- ஜூலை 2024


நிறைவு- செப்டம்பர் 2024


ப்ரவர்த்தக் இணையதள முகவரி- https://iitmpravartak.org.in/