ஐஐடிசென்னை, கேட் எனப்படும் பொறியியல்பட்டதாரிதகுதித்தேர்வு (Graduate Aptitude Test in Engineering – GATE) 2027-க்கானதேதிகள், பாடத்திட்டதிருத்தம், புதியவினாத்தாள்ஆகியவற்றைஅறிவித்துள்ளது.
ஐஐட் சென்னை, 2027ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வை நடத்தும் ஒருங்கிணைப்பு கல்வி நிறுவனமாக செயல்படுகிறது.
கேட் தேர்வு எப்போது?
பல்வேறு பாடங்களில் விண்ணப்பதாரர்களின் புரிதலை மதிப்பீடு செய்யக்கூடிய கேட் தேர்வு 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 6,7,13,14,20,21 ஆகிய தேதிகளில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘கேட்’ தேர்வானது பொறியியல்/ தொழில்நுட்பம்/ அறிவியல்/ கட்டடக் கலை/ வணிகம்/ கலை/ மானுடவியல் உள்ளிட்ட இளங்கலைப் பட்டப்படிப்புக்கான பாடங்களில் விண்ணப்பதாரர்களின் புரிதலை மதிப்பிடும் தேசிய அளவிலான தேர்வாகும். கடந்த 1983ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘கேட்’ தேர்வு தற்போது 45-வது ஆண்டாக நடைபெறவிருக்கிறது.
விண்ணப்பப் பதிவு எப்போது?
இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஆகஸ்ட் மாத மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 பிப்ரவரி 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன. முற்பகல், பிற்பகல் என இரு அமர்வுகளாக தேர்வுகள் நடத்தப்படும்.
இதுதொடர்பானவிவரங்களுக்குகேட் 2027க்கானஅதிகாரப்பூர்வஇணையதளத்தைபார்வையிடலாம் - https://gate2027.iitm.ac.in/
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
‘கேட்’ தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், மத்திய கல்வி அமைச்சம், இதர அரசு முகமைகளின் ஆதரவுடன் இயங்கிவரும் பொறியியல்/ தொழில்நுட்பம்/ அறிவியல்/ கட்டடக்கலை/ மானுடவியல் போன்ற தொடர்புடைய பிரிவுகளில் நிதியுதவியுடன் கூடிய முதுகலை, நேரடி முனைவர், முனைவருக்கான பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
எதற்காக இந்தத் தேர்வு?
சில கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை அல்லாத மாணவர் சேர்க்கைக்கும் கேட் தேர்வு மதிப்பெண்களையே கருத்தில் கொள்கின்றன. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் பணிநியமனங்களின் போது கேட் மதிப்பெண்களைப் பயன்படுத்துகின்றன. புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் ‘கேட்’ மதிபெண்களையே ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் கருத்தில் கொள்கின்றன.
தேர்வு முறை
கணினி அடிப்படையில் நடத்தப்படும் கேட் 2027 தேர்வில், மொத்தம் 30 தேர்வுத் தாள்கள் உள்ளன. அதிகரித்து வரும் தேவைக்கேற்ப 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் திருத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கேட் 2027ல் ரோபாட்டிக்ஸ்மற்றும்ஆட்டோமேஷன் என்ற புதிய வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜவுளிப் பொறியியல் மற்றும் ஃபைபர் அறிவியல் வினாத்தாள், பொறியியல் அறிவியல் பிரிவின் கீழ் உட்பிரிவுத் தாளாக மாற்றப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
அனுமதிக்கப்பட்ட இரண்டு ஜோடி தேர்வுத்தாள்களில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ எழுதுவதற்கு தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெறும் ‘கேட்’ மதிப்பெண், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கது என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.
