தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் படிக்க விரும்பும் சிலருக்கு, சிசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கலாமா ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கலாமா என்று குழப்பம் வருகிறது. அவர்களது குழப்பத்தை போக்கும் வகையில் இந்த தொகுப்பு அமைகிறது.
CBSE என்பது மத்திய அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கப்படும் கல்வி முறையாகும். தனியார் மற்றும் அரசு பள்ளிகள் ஆகிய இரண்டும் இந்த கல்வி வாரியத்தின் அடிப்படையில் இயங்குகின்றன.
ICSE பாடத்திட்டத்தில் CISCE என்ற தேசிய அளவிலான தனியார் கல்வி வாரியம் தேர்வை நடத்துகிறது. இது அரசாங்கத்தின் பாடத்திட்டத்தின் கீழ் வருவதில்லை.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் கோட்பாட்டு அறிவை (theoratical knowledge) வழங்குவதில் சிறப்பானதாக உள்ளது. அதேசமயம் ஐசிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறை அறிவை ( practical knowledge வழங்குவதில் சிறப்பானதாக உள்ளது. இரண்டு பாடத்திட்டத்தில் CBSE பாடத்திட்டம் எளிமையானதாக உள்ளதாக பெரும்பாலான மாணவர்கள் கூறுகின்றனர். ஐசிஎஸ்இ அனைத்து தலைப்புகளையும் ஆழமாக ஆராய்கிறது.எனவே மாணவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது.
CBSE பாடத்திட்டத்தை ஒப்பிடுகையில் ICSE க்கு பாடத்திட்டத்துக்கு ஆங்கில மொழி திறன் அதிகம் தேவை என கூறப்படுகிறது. ICSE பாடத்திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்கள் ஆங்கில மொழியில் மிகவும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளதால், மொழி அடிப்படையிலான போட்டித் தேர்வுகள் மற்றும் TOEFL, IELTS மற்றும் SAT போன்ற வெளிநாட்டுத் தேர்வுகளை கையாலுவதில் மற்றவர்களை விட ICSE மாணவர்களுக்கு சாதகம் என்றே கூறப்படுகிறது. அதேசமயம் சிபிஎஸ்இ மாணவர்கள் ஜேஇஇ மற்றும் நீட் போன்ற தேர்வுகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதாக கூறப்படுகிறது. சிபிஎஸ்இ வாரியத்தில் பெற்ற மதிப்பெண்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் வெளிநாட்டு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ICSE சான்றிதழுக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றன.
CBSE பள்ளிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுவதால், மாணவர்கள் வேறு இடங்களுக்கு மாறும் போது எளிதாக உள்ளது. ஆனால் பள்ளிகள் குறைவாக உள்ளதால், வேறு இடங்களுக்கு செல்லும் போது சற்று சிரமம் என கூறப்படுகிறது. சிபிஎஸ்இ தர நிர்ணயமானது அகரவரிசை ( A1, A2,B1,B2 ) அடிப்படையிலான முறையை பின்பற்றுகிறது. ஐசிஎஸ்இ எண்களாக காட்டப்படும் தர நிர்ணய அடிப்படையிலான முறையை பின்பற்றுகிறது.
CBSE ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி அடிப்படையிலான கல்வி முறைகளை கொண்டுள்ளது. ஆனால் ICSE ஆங்கில மொழியை மட்டுமே பின்பற்றுகிறது.
இந்த தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். மெலும், தெளிவாக ஆராய்ந்து, உங்களது விருப்பத்தின் அடிப்படையில், உங்களுக்கு ஏற்ற பாடத்திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.