ஐசிஏஐ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் சிஏ இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் இதைப் பெறுவது எப்படி? காணலாம்.

Continues below advertisement

ஆடிட்டர் எனப்படும் பட்டயக் கணக்காளராக விரும்பும் மாணவர்களுக்கு ஐசிஏஐ சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆடிட்டர் ஆக முடியும். இவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.

3 கட்டத் தேர்வு

சிஏ தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடத்தப்படுகிறது. பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் நேரடியாக முதல்நிலைத் தேர்வை எழுதலாம்.

Continues below advertisement

அதே நேரத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் போதும்.

செப்டம்பர் மாதம் நடைபெறும் சிஏ தேர்வுகள்

இதற்கிடையே இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட்டை ஐசிஏஐ வெளியிட்டுள்ளது.

இதன்படி, குரூப் 1 இறுதித் தேர்வு செப்டம்பர் 3, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும், குரூப் 2 தேர்வு செப்டம்பர் 10, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. இடைநிலைப் பாடத்துக்கான குரூப் 1 தேர்வுகள் செப்டம்பர் 4, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும், குரூப் 2 தேர்வுகள் செப்டம்பர் 11, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளன.

4 மணி நேரம் நடைபெறும் தேர்வு

3 மணி நேரத்துக்கு தேர்வு நடைபெறும். எனினும் முதல்நிலை அடிப்படைத் தேர்வுக்கான 3 மற்றும் 4ஆம் தாள் தேர்வுகள் மட்டும் 2 மணி நேரம் நடைபெறும். அதேபோல இறுதித் தேர்வின் 6ஆம் தாள், 4 மணி நேரம் நடைபெறும்.

மாணவர்கள் ஐசிஏஐ அதிகாரப்பூர்வ இணையதளமான icai.org என்ற இணைப்பை க்ளிக் செய்து ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி? (ICAI CA admit card 2025: How to download )

  • மாணவர்கள் icai.org என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • அதில் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Students Login’ பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் தோன்று இறுதி அல்லது இடைநிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைப்பு பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • Candidates can follow the steps below to download the ICAI CA admit card 2025 for அதில் கேட்கப்படும் தகவல்களை உள்ளிட்டு, சப்மிட் பொத்தானை அழுத்தவும்.
  • திரையில் தோன்றும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: icai.org.