5,830 ஐபிபிஎஸ் கிளர்க்  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் இருப்பதால் உடனே விண்ணப்பிக்கமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மொத்தம் 5,830 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், 268 காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கல்வித் தகுதி : 


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் இயக்க தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்பாக டிப்ளமோ, டிகிரி அல்லது சான்றிதழ் படிப்பு அவசியம் படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு :


விண்ணப்பதார்கள் 20 வயதுக்கு குறையாமலும், 28 வயதுக்கு  மிகாமலும் இருக்க வேண்டும். 


தேர்வுகள்: 


ஆகஸ்ட் 28,29 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



விண்ணப்பக் கட்டணம்: 


பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/crpcl11jun21/