2024ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 29 முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், சிறந்த பொறியியல் கல்லூரி, படிப்பைத் தேர்வு செய்வது எப்படி என்று பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் குழப்பம் நீடித்து வருகிறது.


வானமே எல்லை என்ற ABP நாடு உயர் கல்வி  வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் இவற்றுக்கு விடை காணலாம். இதுகுறித்துப் பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி நம்மிடம் கூறும்போது, ’’கல்லூரி பெயர், எண் (Code), அங்கு வழங்கப்படும் படிப்புகள், நீங்கள் விரும்பும் படிப்புகள் ஆகியவற்றை எழுதி வைத்து சாய்ஸ் ஃபில்லிங்கைச் செய்ய வேண்டும்.


Core படிப்புகளுக்கு அதிகத் தேவை


தலைசிறந்த கல்லூரிகளில் இரண்டாம் கட்ட பொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது, அதைவிடக் குறைவான தரம் கொண்ட கல்லூரிகளில் முதல் கட்டப் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்வதை விட நல்ல திட்டமாக இருக்கும். அதே நேரத்தில் இஇஇ, மெக்கானிக்கல் உள்ளிட்ட Core படிப்புகளுக்கு வருங்காலத்தில் அதிகத் தேவை இருக்கப் போகிறது’’ என்று ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.


இவை தவிர்த்து, 



  • டாப் ரேங்க் மாணவர்கள் கணினி, ஏஐ படிப்புகளைத் தேர்வு செய்யவில்லையே?

  • கட் ஆஃப் எப்படி இருக்கும்?

  • மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  • சராசரி, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எப்படி கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும்?

  • 150-க்கும் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு எப்படிப்பட்ட கல்லூரிகள் கிடைக்கும்?

  • கல்லூரி தேர்வுக்கு முன்னால் என்னென்ன செய்ய வேண்டும்?

  • எஸ்சிஏ டூ எஸ்சி கலந்தாய்வு பற்றி சொல்லுங்கள்..

  • 7.5 சதவீத இட ஒதுக்கீடு எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

  • டாப் 10 கல்லூரிகளில் சேர பிசி, எம்பிசி, எஸ்சி மாணவர்களுக்கு பொதுவாக எவ்வளவு கட்-ஆஃப் தேவை?

  • 2ஆம் கட்டக் கலந்தாய்வில் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காண இந்த வீடியோவைக் காணுங்கள்.



 


வேறு சந்தேகங்கள் இருந்தால் 6382219633 என்ற எண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது education.tamil@abpnetwork.com  என்ற இ-மெயில் முகவரிக்கும் சந்தேகங்களை அனுப்பலாம்.