9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதன்மைக் கருத்தாளர்கள் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் கல்வி குறித்து ஆலோசனைகள் மற்றம் வழிகாட்டுதல்கள் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். அதற்கென தனியே கலைத்திட்டம், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள்
நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாநில அளவிலான பயிற்சிகள் டயட் விரிவுரையாளர்களுக்கும் முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதன்மைக் கருத்தாளர்கள் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் கல்வி குறித்து ஆலோசனைகள் மற்றம் வழிகாட்டுதல்கள் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்புகள் :
1. ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பேர் வீதம் 38 மாவட்டத்திற்கு டயட் விரியுரையாளர்கள் தேர்ந்தெடுத்தல்.
2. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஒரு ஆசிரியர் வீதம் ஆர்வமிக்க ஒரு ஆசிரியரை தேர்ந்தெடுத்து வருகின்ற 30.06.2023க்குள் எமிஸ் தளத்தில் வாயிலாக சார்ந்த தலைமை ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3. 9ஆம் வகுப்பு மொழிப் பாட ஆசிரியர்கள் அல்லது கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரலாம்.
தலைமை ஆசிரியர் பொறுப்புகள் :
சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆர்வமிக்க ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியரின் விவரங்களை 30.00.2023க்குள் எமிஸ் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்திட வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனப் பேராசிரியர்கள் (DIET Principals)
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணைந்து ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பேர் வீதம் 38 மாவட்டத்திற்கு டயட் விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுத்து, அவர்களின் பெயர், தொலைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி , அவர்களுடைய பணி போன்ற விவரங்களை cgtnss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.