அதி கனமழை எச்சரிக்கையால் அண்ணாமலை பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.


செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு:


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் 4 மற்றும் 5ம் தேதிகள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் வரும் திங்கட்கிழமை (டிச.4ம் தேதி)  நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள்  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுளது. மிக்ஜாம் புயல் எதிரொலியாலும், அதிகனமழை காரணமாகவும்  தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை தொடர்பான எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் திங்களன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு:


இதனிடையே, திங்கட்கிழமை நடைபெற இருந்த  சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர கல்வி திட்டத்தில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்த்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட  செமஸ்டர் தேர்வுகள்  வேறு ஒரு நாளில்  நடைபெறும் என்று  சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


ரயில் சேவை ரத்து:


புயல் வரும் 4-ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை முதல் 7 ஆம் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.