உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் மாணவர்களுக்கும் தொழில்நுட்பம் கற்கத் துடிப்பவர்களுக்கும் ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2026-ம் ஆண்டிற்காக, செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி நிரலாக்கம் (Programming) சார்ந்த 6 முக்கிய ஆன்லைன் படிப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

என்னென்ன படிப்புகள்?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணினி அறிவியலின் அடிப்படைகள் (CS50), பைதான் (Python), வெப் டெவலப்மெண்ட், டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் உள்ளிட்ட 6 பிரத்யேக கோர்ஸ்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உலகத்தரம் வாய்ந்த ஹார்வர்டு பேராசிரியர்களால் இந்த வகுப்புகள் மிக எளிமையாகப் புரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

யாரெல்லாம்சேரலாம்?

இந்த படிப்புகளில் சேர எந்த முன் அனுபவமும் தேவையில்லை. அடிப்படை ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் ஐடி துறையில் வேலை தேடுவோர் மற்றும் தங்களை மேம்படுத்திக்கொள்ள நினைக்கும் ஊழியர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். ஆன்லைன் வழியில் நடப்பதால், அவரவர் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

Continues below advertisement

சான்றிதழ்உண்டு

எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தை முழுவதும் ஏஐ வசமே இருக்கப்போகிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப இளைஞர்களைத் தயார்படுத்தும் நோக்கில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த கோர்ஸ்களை முற்றிலும் இலவசமாகப் படிக்கலாம்.

ஆனால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் (Verified Certificate) தேவைப்படுவோர் மட்டும் அதற்கான குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும்முறை

விருப்பம் உள்ளவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கற்றல் தளம் அல்லது edX இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து கொள்ளலாம். பல லட்சங்கள் செலவு செய்து படிக்க வேண்டிய உலகத்தரம் வாய்ந்த படிப்புகளை வீட்டில் இருந்தபடியே இலவசமாகக் கற்க, இதைவிடச் சிறந்த வாய்ப்பு கிடைக்காது.