அண்மைக் காலமாக எலக்ட்ரிக் கார் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்ற எம்.ஜி.வின்ட்சர் (MG Windsor) காரின் நீண்டகால ரிவ்யூ பார்க்கலாமா? 38kWh பேட்டரி கொண்ட இதன் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் நிறை, குறைகள் இதோ:

Continues below advertisement

ரேஞ்ச்எப்படி?

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 332 கி.மீ. வரை செல்லலாம் என நிறுவனம் கூறினாலும், நிஜத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிட்டி டிராஃபிக் சேர்த்து 280 கி.மீ. வரை ரேஞ்ச் கிடைக்கிறது.

குறிப்பாக 'Eco+' மோடில் ஓட்டும்போது நல்ல பலன் தெரிகிறது. ஆபிஸ் சென்று வர வாரத்திற்கு ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதுமானதாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் செலவை ஒப்பிடும்போது இதன் பயன்பாட்டுச் செலவு மிக மிகக் குறைவு.

Continues below advertisement

பவர்மற்றும்டிரைவிங்

பவர் டெலிவரி மிக ஸ்மூத்தாக இருப்பதால் சிட்டிக்குள் ஓட்ட அருமையாக உள்ளது. ஸ்டீயரிங் இலகுவாக இருப்பதும், காரின் கச்சிதமான அளவும் டிராஃபிக்கில் எளிதாக பயணிக்க உதவுகிறது. ஆனால் சஸ்பென்ஷன் சற்று கடினமாக இருப்பதால் மேடு பள்ளங்களில் செல்லும்போது மட்டும் லேசான குறைபாட்டை உணர முடிகிறது. அதே நேரத்தில் இரவில் எல்இடி ஹெட்லைட் வெளிச்சமும், குறைவான வேகத்தில் கேமராக்களின் துல்லியமும் சிறப்பாக உள்ளன.

இன்டீரியர், பிற வசதிகள்

மற்ற கார்களைவிட எம்ஜி வின்ட்சரில் இட வசதி தாராளமாக உள்ளது. இதில் தட்டையான தரைப்பகுதியுடன் 5 பேர் வசதியாக அமரலாம். பின் இருக்கைகளை சாய்த்துக்கொள்ளும் வசதியும், 5 பேரின் லக்கேஜ்களை வைக்கும் அளவிலான பெரிய பூட் ஸ்பேஸும் முக்கிய அம்சம்.

குறைகளே இல்லையா?

ஆனால் இந்த காரின் முக்கியக் குறை, அனைத்திற்கும் டச் ஸ்கிரீனையே சார்ந்திருப்பதுதான். தனித்தனி பட்டன்கள் இல்லாததால், சன்ரூஃப், மிரர்களை அட்ஜஸ்ட் செய்யக்கூட ஸ்கிரீனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது ஆரம்பத்தில் சற்று குழப்பமாக இருக்கும். எனினும், ஸ்கிரீன் எந்த இடத்திலும் ஹேங் ஆகவில்லை. வாய்ஸ் கமாண்ட் வசதியும் அருமையாக வேலை செய்கிறது.

காரை வாங்கலாமா?

அனைத்திற்கும் டச் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு சிறு குறையைத் தவிர்த்துப் பார்த்தால், நகர பயன்பாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த, விசாலமான எலக்ட்ரிக் கார் இது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு முழுமையான மதிப்பை இந்த எம்.ஜி விண்ட்சர் நிச்சயம் வழங்கும் என்றே நம்புகிறோம்.


Car loan Information:

Calculate Car Loan EMI