11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்‌ பிப்ரவரி 28 முதல் தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை இணையதளம்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:


’’நடைபெறவுள்ள மார்ச்‌/ஏப்ரல்‌ 2023, மேல்நிலை முதலாமாண்டு மற்றும்‌ இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித் தேர்வர்கள்‌ (தட்கல்‌ உட்பட) தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 28.02.2023 அன்று பிற்பகல்‌ முதல்‌ www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


தனித்தேர்வர்கள்‌,  www.dge1.tn.gov.in  என்ற இணையதளத்திற்குச்‌ சென்று முதலில்‌ “HALL TICKET” என்ற வாசகத்தினை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும்‌ பக்கத்தில்‌ “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH/APRIL 2023 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும். அதில் தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து, தங்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) மற்றும்‌ இரண்டாமாண்டு (பிளஸ் 2) பொதுத்‌ தேர்வெழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும்‌ சேர்த்து, ஒரே தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு மட்டும்‌ வழங்கப்படும்‌.


மார்ச்‌/ ஏப்ரல்‌ 2023, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை (TIME TABLE) www.dget.tn.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று அறிந்துகொள்ளலாம்’’.


இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 


மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு  பெயர்ப் பட்டியல் பதிவிறக்கம்‌ தொடக்கம்


மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்விற்கான பள்ளி மாணவர்களின்‌ தேர்வெண்ணுடன்‌ கூடிய பெயர்ப் பட்டியலை அனைத்து மேல்நிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்களும்‌ 24.01.2023 முதல்‌ பிப்ரவரி முதல்‌ வாரம்‌ வரையிலான நாட்களில்‌ அரசுத்‌ தேர்வுகள்‌ இணைய தளத்திற்கு சென்று பெயர்ப் பட்டியலை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பள்ளி மாணவர்களின்‌ விவரங்கள்‌ அடங்கிய, எக்ஸல் வடிவத்தில்‌ உள்ள பெயர்ப் பட்டியலினையும்‌ (Nominal Roll), +1 Arrear மாணவர்களின்‌ பெயர்ப் பட்டியலினையும்‌ மற்றும்‌ தனித் தேர்வர்களின்‌ பெயர்‌ பட்டியலினையும்‌ (11, 12ஆம் வகுப்பு) அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌ பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.