தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழ்நாட்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 12ஆம் வகுப்பு வரை டிசம்பர் 24 முதல் ஜனவரி 4ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வு அட்டவணை என்ன?
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெறும் தேதிகள் வெளியாகி உள்ளன. இதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்க உள்ளன. டிசம்பர் 23 வரை தேர்வு நடக்க உள்ளது.
அதேபோல 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி, 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது.
டிசம்பர் 24 முறை விடுமுறை
இந்த நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த நாள் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்று தகவல் வெளியானது.
ஜனவரி 5 பள்ளிகள் திறப்பு?
எனினும் கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே பள்ளிகளுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதில் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறைகள் ஆகும். அந்த நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் டிசம்பர் 24 முதல் ஜனவரி 4ஆம் தேதி தேதி மொத்தம் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்ப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 2 திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.