பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் 11 கோரிக்கைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி உள்ளதாவது:
- 01.07.2004 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு ஏறக்குறைய 19 ஆண்டு காலம் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி விதிகள் இதுவரை வகுக்கப்படவில்லை. அதன் பின்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியேற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி விதிமுறைகள் வகுப்பட்டுள்ளன. எனவே நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி விதியினை உருவாக்க கேட்டுக் கொள்கிறோம்.
- புதிய பணி விதியில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை, நடுநிலைப்பள்ளியில் பணிபுரியக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கக் கேட்டுக்கொள்கிறோம்.
- தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மாநில முன்னுரிமை பட்டியல் விரைவில் தயார் செய்து பொதுமாறுதல் கலந்தாய்வை நடந்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
- முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நேரடி (டிஆர்பி) நியமனத்தில் இருந்து 10 சதவீதம் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.
5. நடுநிலைப் பள்ளியில் பணிபுரியக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு பள்ளி துணை ஆய்வாளராக நியமிக்க வேண்டும்.
- வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தை முன்பு போல 70:30 என்று நடைமுறைப்படுத்த வேண்டும்.
- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக நியப்பது போல, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் மூத்த நடுநிலைப் பள்ளி தலைலமை ஆசிரியரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு நேர்முக உதவியாளராக நியமிக்க வேண்டும்.
- உயர்கல்வி முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வை பழைய நடைமுறையைப் பின்பற்றி, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
9. ஈட்டியவிடுப்பு சரண் செய்ய நடவக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சட்டமன்றத்தில்அறிவித்தபடி, 100 மாணவர்களுக்கு மேல் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நியமன செய்ய கேட்கிறோம்.
- 2004 முதல் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய காலத்தை பணி காலமாக கருத வேண்டும்.
மேலே உள்ள அனைத்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி ஆசிரியர்- மாணவர் நலன் காக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.