அரசு தொழில்நுட்பக்‌ கல்வித்‌ துறையினால்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ நடத்தப்பட உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும்‌ கணக்கியல்‌ தேர்வுகளில்‌ கலந்து கொள்ள ஜூலை 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்‌ கல்வி தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார். 


அரசு தொழில்நுட்பத்‌ தேர்வுகளான தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும்‌ கணக்கியல்‌ தேர்வுகள் 2023ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர்‌ www.tndtegteonline.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌


இணையதளத்தின்‌ வாயிலாக விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள்- ஜூலை 21, 2023


இணைய விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ளுவதற்கான நாள்‌ - 24.07.2023 to 26.07.2023


வணிகவியல்‌ தேர்வுக்கான தேர்வுக் கட்டணம்‌ எவ்வளவு?


பதிவுக்‌ கட்டணம்‌: ரூ‌.30 
இளநிலை- ரூ.100/-
இடைநிலை- ரூ.120/-
முதுநிலை -ரூ.130/-
உயர் வேகம்‌- ரூ.200/-


கல்வித் தகுதி என்ன?


PRE-JUNIOR நிலை டைப் ரைட்டிங் (ENGLISH & TAMIL) தேர்வுக்குக் குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


JUNIOR நிலை டைப் ரைட்டிங் (ENGLISH & TAMIL) தேர்வுக்குக் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


SENIOR நிலை டைப் ரைட்டிங் (ENGLISH & TAMIL) தேர்வுக்குக் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது JUNIOR நிலை டைப் ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஷார்ட் ஹேண்ட் இளநிலை (ENGLISH & TAMIL) மற்றும் ஷார்ட் ஹேண்ட் இடைநிலை ஆங்கிலத் தேர்வுக்கு,  அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் கலந்துகொண்டிருக்க வேண்டும். தனித் தேர்வர்கள் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஷார்ட் ஹேண்ட் முதுநிலை (ENGLISH & TAMIL) தேர்வுக்கு,  அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். அல்லது 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தாலும், ஜூனியர் நிலை ஷார்ட் ஹேண்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


தொழில்நுட்பக்‌ கல்வித்‌ துறையின்‌ தொலைபேசி எண்‌: 044 - 22351018, 22351014, 22351015 Extn. 356, 358
மின்னஞ்சல்‌ முகவரி: tngteaug2023 @gmail.com


ஜூலை 26ஆம் தேதிக்கு பிறகு திருத்தம்‌ மேற்கொள்வதற்கு அபராத தொகை செலுத்தப்பட வேண்டும்‌.


தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள: https://www.tndtegteonline.in/GTEOnline/assets/pdf/202308/20230618_GTE_Aug2023_Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். இதில் இளநிலை, இடைநிலை, முதுநிலை மற்றும் உயர் வேக தட்டச்சுத் தேர்வுகள் எங்கே நடைபெறுகிறது, முகவரி என்பன உள்ளிட்ட விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. 


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndtegteonline.in/GTEOnline/