தென்காசி நகரப்பகுதியில் உள்ள நடுமாதாங்கோயில் தெருவில் உள்ளது சுப்பிரமணியன் என்பவரது வீடு. இவ்வீட்டில்  கடந்த 10 வருடங்களாக சந்திரன்-சித்ரா தம்பதியினர்  வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். இதில் கணவர் சந்திரன் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி சித்ரா பீடி சுற்றும் தொழில் செய்து  குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக  இவர்களது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. சித்ராவின் சகோதரர் சந்திரனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது சித்ராவிற்கு உடல் நிலை சரியில்லை என்றும் இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்து விட்டு போனை வைத்துள்ளார். தொடர்ந்து மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போது போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த சித்ராவின் தம்பி தனது அக்கா வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது  வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டினுள் துர்நாற்றமும் அடித்துள்ளது. இதுகுறித்து சித்ராவின் சகோதரர்  தென்காசி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார், அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துர்நாற்றம் வீசிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.


அப்போது, கட்டிலில் சித்ராவின் கை, கால்களை கட்டிவைத்த நிலையில் முகம் சிதலமடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். தொடர்ந்து, அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்த வீட்டில் மனைவி கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதலமடைந்த நிலையில் நேற்று இறந்து கிடப்பததால், சித்ராவை அவரது கணவன் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் சந்தேகமடைந்தனர்.  மேலும் கணவர் சந்திரனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது சித்ராவின் கணவர் சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். எதற்காக கொலை செய்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கட்டி வைத்து கொடூரமாக கணவனே கொலை செய்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண