தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருவதால், கல்வித் துறை முழுவீச்சில் செயல்பட ஆரம்பத்திருக்கிறது. அந்த வகையில் அரசுக் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னதாக அவர்களின் சான்றிதழ்களை சர்பார்க்குமாறு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


1.20 லட்சம் பேர் விண்ணப்பம்:


தமிழகம் முழுவதும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர 1.20 லட்சம் மாணாக்கர் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை கல்லூரி கல்வி இயக்குநரகம் வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அந்தந்த கல்லூரிகளின் வாயிலாகவே நடைபெறுகிறது. 
இந்நிலையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப் பட்டியல் வெளியானது. தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் இன்று முதல் கல்லூரிகளில் கவுன்சிலுங் நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. 


உயர் கல்வித்துறை உத்தரவு:


இன்று கவுன்சிலிங் நடைபெறும் நிலையில் மாணவர்களின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் சரி பார்க்க வேண்டும். அரசு தேர்வுத் துறை வாயிலாக அசல் சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிந்தபின்னரே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


முதுநிலை படிப்புக்கான அறிவிப்பு:


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேர விரும்புவோரும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் www.tngasapg.org, www.tngasapg.in போன்ற இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குல் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு கல்லூரிக்கு பதிவுக் கட்டணமாக ரூ.2 ம், விண்ணப்பக் கட்டணமாக ரூ.58 ம் செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பதிவுக் கட்டணமான ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் விவரங்களை மாணவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 044 28260098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.